இஸ்லாமியர்களின் புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளாநாயகம் கலாநிதி ரங்க கலான் சூரியவின் வழிகாட்டலின் கீழ் “இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்” என்ற தலைப்பில் ஏற்பாடுசெய்யப்படடிருந்த இந்த நிகழ்வு, அரசாங்க தகவல் தணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது.

ஸ்ரீ ஐயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கைக்குரிய தம்பர அமல தேரர் உள்ளிட்ட மதத்தலைவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். 

அமைச்சர்  ரிஷாட் பதியுதீன், இராணுவ உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் இந்த இப்தார் நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.