ஆசிரிய நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை : ஜனாதிபதி

Published By: Robert

22 Jun, 2017 | 01:13 PM
image

ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியகள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

பொலநறுவை, சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு உரித்தளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்வி சீராக வேண்டும் என்பதற்காக தீர்மானத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளைக்கும் கல்விக்கான சலுகைகள் கிடைக்காமல் இருக்கக் கூடாதென்று தெரிவித்தார். 

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களினதும் பிரச்சினைகளை தீர்த்தல், வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரே வகையில் சேவையாற்றுதல் ஆகியவை ஜனாதிபதி என்ற வகையில் தனது பொறுப்பாகுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

இன்று முற்பகல் சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மாணவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். 

நினைவுப் படிகத்தை திறந்து வைத்து, 5 வகுப்பறைகளுடனான புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு உரித்தாக்கிய ஜனாதிபதி கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார். 

”புத்தெழுச்சிசெறும் பொலநறுவை” மாவட்ட  திட்டத்தின் கீழ் இந்த பாடசாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தினர் நிர்மாண பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02