வரி ஏய்ப்பு தொடர்­பாக விளக்கமளிப்­ப­தற்­காக போர்த்­துக்கல் கால்­பந்து அணியின் தலை­வரும் ரியல் மாட்ரிட் அணியின் நட்­சத்­திர வீர­ரு­மான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ எதிர்­வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜ­ராக உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

ரொனால்­டோவைத் தொடர்ந்து வரி ஏய்ப்புப் புகாரில் ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்­சி­யா­ளரும் சிக்­கி­யுள்ளார்.

ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்­சி­யா­ளர்­மீது சுமார் 5 மில்­லியன் டொலர் வரை வரி ஏய்ப்பு செய்­துள்­ள­தாகப் புகார் எழுந்­துள்­ளது. 

ஸ்பெயின் நாட்டின் முக்­கிய கால்­பந்து அணி­யான ரியல் மாட்ரிட் அணியில்,  2013 ஆம் ஆண்டு வரை பயிற்­சி­யா­ள­ராக இருந்­தவர் ஜோஸ் மௌரின்ஹோ. 

அந்தக் கால­கட்­டத்தில், இவர் சுமார் 5 மில்­லியன் டொலர் வரை வரி ஏய்ப்பு செய்­துள்­ள­தாக ஸ்பெய்ன் வழக்­க­றிஞர் ஒருவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார். 

எனினும் இந்தப் புகாரை, ஜோஸ் மௌரின்ஹோ முழு­மை­யாக மறுத்­துள்ளார். 

இவர், தற்­போது இங்­கி­லாந்தின் மான்­செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்­சி­யா­ள­ராக உள்ளார். 

கால்பந்து வீரர்கள் அடுத்தடுத்து வரி ஏய்ப்பு புகாரில் சிக்குவது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம்  பார்­சி­லோனா அணியின் முன்­னணி வீர­ரான மெஸ்­ஸியும் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி, அவ­ருக்கு 21  மாதம் சிறைத்தண்டனை விதித்து ஸ்பெய்ன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.