உலகில் தற்­போது ஏற்­பட்­டுள்ள  கால­நிலை மாற்றம் கார­ண­மா­கவே  டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ரித்­துள்­ளது.  இலங்­கையில் மேலும்  டெங்­கு­நோயின்  தாக்கம் அதி­க­ரிக்கும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது. 

கடந்த மே மாதம்  நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லையே தற்­போது நாட்டில் டெங்கு நோய் அதி­க­ரிக்க கார­ண­மாகும்.  எவ்­வா­றெ­னினும் அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து  பக்­டீ­ரி­யாவைக் கொண்­டு­வந்து  அதனைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்போம் என்று   சுகா­தார அமைச்சர் ராஜித சேன­ராட்ண  தெரி­வித்தார்.

மக்கள் தமது சுற்­று­ச்சூ­ழலை மிகவும்  சுத்­த­மாக வைத்­துக்­கொள்­ள­ வேண்டும். வீட்டில் எந்­த­வொரு இடத்­திலும் மூன்று நாட்­க­ளுக்கு மேலும் தண்­ணீரை வைத்­தி­ருக்­க­வேண்டாம். குளி­ய­ல­றையில் கூட எந்­த­வொரு இடத்­திலும் மூன்று நாட்­க­ளுக்கு மேல் நீரை வைத்­தி­ருக்க வேண்டாம் என்றும் அவர் எச்­ச­ரித்தார். 

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில்   நேற்று  நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை  முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு மேலும் கூறு­கையில் குப்பை பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு தற்­போது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.  

 இது­தொ­டர்பில்  அனைத்துத் தரப்­புக்­களும்  பேச்­சு­வார்த்தை நடத்­து­கின்­றன.  குப்பைப் பிரச்­சி­னையைத் தீர்­ப்பதன் மூலம் டெங்கு பர­வு­வதை தடுத்து நிறுத்­தலாம்.  

எமது நாட்டில் குப்­பையை மீள் சுழற்­சிக்குப் பயன்­ப­டுத்­தா­மையே மிகப் பெரிய பிரச்­சி­னை­யாகும்.  

மீதொட்­ட­முல்­லவில் குப்பை மேடு சரிந்­ததன் மூலமே இது ­தொ­டர்­பான அபாயம்  அதி­க­ரித்­தது. கடந்த அர­சாங்­கமே  இதனை முன்­னெ­டுத்­தது. பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு தற்­போது 122 நிறு­வ­னங்கள் முன்­வந்­துள்­ளன. அவற்றில் சில  நிறு­வ­னங்­களை தெரிவு செய்து  இந்த நட­வ­டிக்­கையை முன்­னெ­டுப்போம். 

கேள்வி : உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்கள் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுடன் இயங்­கி­யி­ருந்தால் இந்தப் பிரச்­சினை  ஏற்­பட்­டி­ருக்­காது என கூறப்­ப­டு­கின்­றது.  இது தொடர்பில்?

பதில் : உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்கள் சீராக இயங்­கிய காலத்­திலும் குப்பை பிரச்­சினை காணப்­பட்­டது. 2009 ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்கள் சிறப்­பாக  செயற்­பட்­டன. ஆனால் அந்த வரு­டத்தில் 349 பேர் டெங்­கு­ நோ­யினால் உயி­ரி­ழந்­தனர்.  எனவே   உள்­ளூ­ராட்சி மன்­றங்கள்   குப்பை விட­யத்தில் செயற்­றி­ற­னாக செயற்­பட்டன என்று கூற­மு­டி­யாது. எவ்­வா­றெ­னினும் தற்­போது எமது நாட்டில் மே மாதம் நில­விய சீரற்ற கால­நிலை கார­ண­மா­கவே டெங்­குநோய் அதி­க­ரித்­தது.

இதனைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறோம்.  டெங்கு விழிப்­பு­ணர்வு திட்­டங்கள் பர­வ­லாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஜேர்­ம­னி­யி­லி­ருந்து 500 புகை­ய­டிக்கும் இயந்­தி­ரங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.  குப்பை பிரச்­சி­னையைத் தீர்க்க முடி­யு­மாயின் டெங்கு விட­யத்தில்  மேலும் முன்­னேற்­றத்தை காணலாம்.  

எவ்­வா­றெ­னினும் வைத்­தி­ய­சா­லைகள்  சிறப்­பான சேவையை வழங்கி வரு­கின்­றன.  

டெங்கு நோயா­ளர்­களின் உயிர்­களை   வைத்­தி­ய­சா­லைகள்  காப்­பாற்றி வரு­கின்­றன.  குப்பை பிரச்­சி­னைக்கும் தற்­போது சீரான தீர்வு காணப்­பட்டு வரு­கின்­றன.  ஆனால்   மக்கள் மிகவும் விழிப்­பு­ணர்­வுடன் இருக்­க­வேண்டும்.  உதா­ர­ண­மாக   மூன்று நாட்­க­ளுக்கு மேல்  எங்கும்  தண்ணீர் தேங்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­க­வேண்டாம். 

குளி­ய­ல­றை­யி­லுள்ள உப­க­ர­ணங்கள் குளிர்­சா­த­னப்­பெட்­டிகள் உள்­ளிட்ட பல்­வேறு இடங்­களில்  நீர் எமக்கு தெரி­யா­த­வ­கையில் தேங்­கி­யி­ருக்கும். அவ்­வாறு  மூன்று நாட்கள் அவ்­வாறு நீர் தேங்­கி­யி­ருந்தால் அங்கு நிச்சயம் டெங்கு நுளம்பு உருவாகும்.  இலட்சக்கணக்கான  நுளம்புகள் உருவாகும்.   இதனைக்கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

குறிப்பாக அவுஸ்திரேலியாவில் இருந்து ஒருவிதமான பக்டீரியாவைக் கொண்டுவந்து டெங்கு நுளம்புகளை அழிக்க  நடவடிக்கை  எடுக்கப்படும். இது தொடர்பாக அவுஸ்திரேலிய அமைச்சர் இம்மாத இறுதியில்  இலங்கை வரவுள்ளார் என்றார்.