தேசப்­பற்று ஏன் கிரிக்­கெட்டை சுற்­றியே உள்­ளது என்­பது புரி­ய­வில்லை என்று பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் மோர்­தசா கூறி­யுள்ளார்.

மொட்டர்ஷா தலை­மை­யி­லான பங்­க­ளாதேஷ் அணி ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அரை­யி­று­திக்கு முதன்­மு­றை­யாக முன்­னே­றி­யது. ஆனால், இந்­தி­யா­விடம் தோல்­வி­ய­டைந்து இறுதி வாய்ப்பை இழந்­தது.

இந்­நி­லையில் தேசப்­பற்று ஏன் கிரிக்­கெட்டை சுற்­றியே உள்­ளது என்­பது எனக்குப் புரி­ய­வில்லை என்று மோர்­தசா கூறி­யுள்ளார்.

இது­கு­றித்து மொட்டர்ஷா கூறு­கையில் ‘‘நான் ஒரு கிரிக்கெட் வீரன். ஆனால், என்னால் உயிரை காப்­பாற்ற முடி­யுமா? வைத்­தி­ய­ரால்தான் உயிரை காப்­பாற்ற முடியும். ஆனால், நாட்டின் சிறந்த வைத்­தி­யரை யாரும் பாராட்­டு­வ­தில்லை. 

ஒரு நடிகர் சம்­பளம் வாங்கிக் கொண்டு வேலை செய் ­வ­துபோல் நாங்கள் சம்­பளம் வாங்கிக் கொண்டு விளை­யா­டு­கிறோம். இதை­விட மேலும் ஒன்­று­மில்லை. சிலர் தேசப்­பற்று, தேசப்­பற்று என்று கிரிக்கெட்டை சுற்­றியே சொல்­லிக்­கொண்டு வரு­கி­றார்கள். 

கிரிக்­கெட்டால் உங்­க­ளு­டைய சக்­தி வீணா­கி­விடக்கூடாது. நேர்­மை­யான வேலைக்­காக அதனைப் பயன்படுத்த வேண்டும். மக்களின் தேசப்பற்றின் வரையறையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.