இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கொழுப்பு அதிகமாம் 

Published By: Priyatharshan

22 Jun, 2017 | 10:03 AM
image

எமது நாட்டில் இனி­வரும்  காலங்­களில் உடல் ­த­கு­திகாண் பரி­சோ­த­னையில்  சித்­தி­ய­டையும்  வீரர்கள் மட்­டுமே  சர்­வ­தேச  கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு  அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள். 

வயிற்றில் 12 வீதத்­திற்கு மேல் கொழுப்பை கொண்­டி­ருக்கும் வீரர்கள்  எவ்­வ­ளவு திற­மையைக் கொண்­டி­ருந்­தாலும்  கிரிக்கெட் போட்­டி ­களில் விளை­யா­டு­வ­தற்கு தகு­தி­யா­ன­வர்களாக  கரு­தப்­ப­ட­மாட்­டார்கள். இந்த விட­யத்தில் மிகவும் கண்­டிப்­பாக இருக்­கின்றேன் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற  வாராந்த அமைச்­ச­ரவை  முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் தயா ­சிறி ஜய­சே­கர  ஊட­க­வி­யலாளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

 கேள்வி: கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு இரா­ணுவப் பயிற்சி வழங்­க­வேண்­டு­மென  நீங்கள் கூறி­யி­ருந்­தீர்கள். ஆனால் யுத்தம் முடிந்­து­விட்ட  நிலையில் இரா­ணுவப் பயிற்சி எதற்கு என  வீரர்  லசித் மலிங்க கூறி­யி­ருந்தார். இது தொடர்பில்?

பதில்: நான் பல்­வேறு விட­யங்­க­ளையும் ஆரா­ய்ந்து விட்டே இந்த விட­யத்தை கூறி­யுள்ளேன். 

கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு உடல் தகுதி என்­பது மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும்.  இந்த விட­யத்தில்  நான் உறு­தி­யாக இருக்­கப்­போ­கின்றேன்.  

திற­மை­யி­ருந்தால் மட்டும் போ தாது, உடல் தகுதி இருக்­க­வேண்டும்.  சில வீரர்கள் தங்­க­ளது உடல் தகு­தியை  இந்­தி­யாவில் நடக்கும் போட்­டி­களில் மட்­டுமே வெளிக்­காட்­டு­கின்­றனர். 

 ஆனால் இனிமேல்  உடல் தகுதி என்­பது மிகவும் அவ­சி­ய­மாகும். இனி­வரும்  காலங்­களில் உடல் ­த­கு­திகாண் பரி­சோ­த­னையில்  சித்­தி­ய­டையும் வீரர்கள் மட்­டுமே சர்­வ­தேச  கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள். 

வயிற்றில் 12 வீதத்­திற்கு மேல் கொழுப்பை கொண்­டி­ருக்கும் வீரர்கள்  எவ்­வ­ளவு திற­மையைக் கொண்­டி­ருந்­தாலும்  கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு தகு­தி­யா­ன­வ­ர்களாக  கரு­தப்­ப­ட­மாட்­டார்கள். 

இலங்கை வீரர்கள்  மிகவும்  திற­மை­யா­ன­வர்கள் என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றேன். ஆனால்   உடல் ­த­கு­தியும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். 125 ஓட்­டங்­களைப் பெற்ற  இந்­திய வீரர் தவான்  அதன் பின்னர் 50 ஓவர்கள் களத்­த­டுப்பில் ஈடு­ப­டு­கின்றார். 

அவ­ருக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை. ஆனால் எமது வீரர்கள் 50 ஓட்­ட ங்கள் பெற்­ற­வுடனேயே காலைப்­பி­டித்துக் கொண்டு உட்­கார்ந்­து­வி­டு­கின்­றார்கள். 

உடல்­த­குதி அதி­காரி அடிக்­கடி மைதா­னத்­திற்கு  வர­வேண்டி ஏற்­ப­டு­கின்­றது. இந்த நிலை­மைக்கு இனி இட­ம­ளிக்க முடியாது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் வீரர் அக்மல் உடல்தகுதி இல்லாததால் இங்கிலாந்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இவ்வாறு பல விடயங்கள் உள்ளன. எவ்வாறெனினும்  இனி உடல்தகுதி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35