5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம்: புதி­தாக கைதான சந்­தேக நபர் கடத்­த­லுடன் நேர­டி­யாக தொடர்பு

Published By: Priyatharshan

22 Jun, 2017 | 09:41 AM
image

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புற நகர் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல் போகச் செய்­யப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நப­ரான கடற்­படை லெப்­டினன் கொமா­ண்டர் ஹெட்டி ஆரச்சி தொடர்பில் இது­வரை தகவல் இல்லை எனவும் அவர் கைது செய்­யப்பட்டு விசா­ரிக்­கப்பட்டால் இத­னுடன் தொடர்­பு­டைய மேலும் பலர் சிக்­குவர் என சந்­தே­கிப்­ப­தாக குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு நேற்று கோட்டை பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு அறி­வித்­தது. 

அத்­துடன் நேற்று முன்­தினம் கைது செய்­யப்பட்ட கடற்­படை வீரர், மாணவர் கடத்­த­லுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட குழு­வுடன் இணைந்து செயற்­பட்­டவர் என குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யது.

இத­னி­டையே  இந்த சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரான லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்க கைதாகி பிணையில் உள்ள நிலையில், மற்­றைய பிர­தான சந்­தேக நப­ரான லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி நாட்டை விட்டு தற்சமயம் தப்பிச் சென்­றுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது. எனினும் நேற்று இது தொடர்­பி­லான வழக்கு விசா­ரணை கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போது ஹெட்டி ஆரச்சி நாட்டில் உள்­ளாரா அல்­லது தப்பிச் சென்­று­விட்­டாரா என இது­வரை எவ்­வித தக­வல்­களும் இல்லை என  புல­னா­ய்வுப் பிரிவு நீதி­மன்­றிடம் தெரி­வித்­தது.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புற நகர் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ரணை   நேற்று மீளவும் கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. 

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­கர உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் தெசேரா ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்தல் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த கன­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இது குறித்த வழக்கு கோட்டை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெறும் நிலையில் நேற்றும் அது குறித்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

நேற்­றைய விசா­ர­ணையின் போது இக்­க­டத்­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள கடற்­ப­டையின் முன்னாள் லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன்  விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள  கடற்­படை சிறப்பு புல­னா­ய்வுப் பிரிவின் கமாண்டர் சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக் ஷ்மன் உத­ய­கு­மார,  நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ ஆகி­யோ­ருடன் புதி­தாக கைது செய்­யப்பட்ட கித் சிறியும் மன்றில் ஆஜர் செய்­யப்பட்­டனர்.

விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் இலங்­க­சிங்ஹ, உப பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கினர்.

மேல­திக பீ அறிக்கை ஒன்று நீதி­வா­னுக்கு இதன் போது சமர்­ப்பிக்­கப்பட்­டது. இந் நிலை­யி­லேயே புதிய சந்­தேக நபர் தொடர்­பு­பட்ட குற்றம் மற்றும் ஹெட்டி ஆரச்சி தொடர்­பி­லான விடயம் நீதி­வானின் கேள்­விக்கு அமைய மன்றில் பிரஸ்­தா­பிக்­கப்பட்­டது.

  இத­னை­விட சட்ட மா அதி­பரின் பிரதி நிதித்­துவம் தொடர்ச்­சி­யாக மூன்று தவணை விசா­ர­ணை­களில் இல்­லாத நிலையில் அது தொடர்பில் நீதிவான் நேற்று ஞாப­கப்­ப­டுத்தல் கடிதம் ஒன்றி­னையும் சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்­பினார். பாதிக்­கப்பட்ட தரப்பு சட்­டத்­த­ர­ணி­யான அச்­சலா சென­வி­ரத்­னவின் கோரிக்­கையை ஏற்றே அவர் இதனை அனுப்­பினார்.

அத்துடன் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தனவின் கோரிக்கையை ஏற்று அடுத்த தவணையின் போது 2,3,4,5 ஆவது சந்தேக நபர்கள் தொடர்பிலான குற்றம், சாட்சி உள்ளிட்டவையும் அவை தொடர்பிலான விசாரணைகளும் தனித்தனியாக மன்றில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டதுடன் வழக்கை ஜூலை 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43