சைட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுகாதார அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொலிஸார் மேற்கொண்ட தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகத்தினால் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமையினை தடுக்க பொலிஸார் தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகங்கள் மேற்கொண்டு மாணவர்களை விரட்டியடித்த போதே இவ்வனர்த்தம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.