திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்ளூர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட போதே கைதுசெய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 225 மீற்றர் நீளமான தடைசெய்யப்பட்ட வலை, 80 கிலோ கிராம் மீன் ஆகியன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் கைதுசெய்த மீனவர்களையும் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை மீன்பிடித்துறை அதிகாரியிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.