டென்னிஸ் உலகில் பிரபலமான வீராங்கனையாக வலம் வருபவர் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா. இன்றும் உலகளவில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் உலகின் முதலிடத்தில் இருப்பவர். இவர் விரைவில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

பொலிவூட் நடிகர் இயக்குநர் தயாரிப்பாளர் பர்ஹான் அக்தர் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறாரா?அல்லதுமுக்கிய வேடத்தில் நடிக்கிறாரா? என்பது விரைவில் தெரியவரும். அதே சமயத்தில் சானியா மிர்சா தந்தை மகள் இடையேயான உறவை சித்தரிக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

டென்னிஸ் விளையாட்டில் உலகையே கலக்கியதைப் போல் சினிமாவிலும் கலக்கவேண்டும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே பிரார்த்திக்க தொடங்கிவிட்டார்களாம்.

தகவல் : சென்னை அலுவலகம்