பங்களாதேஷில் 18,19 ஆகிய இரு திகதிகளில் மின்னல் தாக்கியதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக பங்களாதேஷ் அரசு நேற்று அறிவித்ததுள்ளது.

பங்களாதேஷில் கடந்த ஆண்டு மின்னலுக்கு 200 பேர் பலியாகினர். குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதம் ஒரே நாளில் மின்னலுக்கு 82 பேர் பலியாகினர். 

காடுகளை அழித்ததும், பனைமரம் போன்ற உயரமான மரங்களை வெட்டியதும் மின்னல் தாக்குதலுக்கு மேலும் காரணங்களாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 18, 19 ஆகிய இரு திகதிகளில்,மின்னல் தாக்கியதில் 22 பேர் உயிரிழந்தனர் என்று பங்களாதேஷ் அரசு நேற்று அறிவித்தது.

கடந்த வாரம் பங்களாதேஷில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 160 இற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இப்போது மின்னல் தாக்கி 22 பேர் பலியாகி இருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.