இலங்கைக்கு விஜயம் மேற்கெள்ளவுள்ளது இந்திய அணி

Published By: Priyatharshan

21 Jun, 2017 | 10:01 AM
image

இந்­தியக் கிரிக்கெட் அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு மூன்று வகைக் கிரிக்கெட் தொடர்­க­ளிலும் விளை­யா­ட­வுள்­ளது. இலங்கை – இந்­திய அணிகள் மோதும் குறித்த தொட­ரா­னது எதிர்­வரும் ஜூலை மாத இறு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இங்­கி­லாந்தில் கடந்த 18 நாட்­க­ளாக நடை­பெற்­று­வந்த சம்­பியன்ஸ் கிண்ணத் தொடர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முடி­வுக்கு வந்­தது.

தற்­போது இந்­திய அணி, மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 5 -ஒருநாள் போட்­டிகள் கொண்ட தொட­ரிலும், ஒரு இரு­ப­துக்கு 20 போட்­டி­யிலும் விளை­யா­ட­வுள்­ளது.

மேற்­கிந்­தியத் தீவு­க­ளு­ட­னான இந்தப் போட்டித் தொட­ர் எதிர்­வரும் ெவள்ளிக்கிழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இத்­தொடர் முடிந்­த­வுடன் இந்­திய அணி, இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­டு­கி­றது. இலங்கை வரும் இந்­திய அணி 3 டெஸ்ட் போட்­டிகள், 5 -ஒரு நாள் போட்­டிகள் மற்றும் ஒரே ஒரு இரு­ப­துக்கு 20 போட்­டி­யிலும் விளை­யா­ட­வுள்­ளது. இத்­தொ­ட­ருக்கு முன்னர் இந்­திய அணி, இலங்கை அணி­யுடன் இரண்டு பயிற்சிப் போட்­டி­க­ளிலும் மோத­வுள்­ளது.

இந்­திய அணிக்­கெ­தி­ரான இந்தத் தொட­ருக்கு முன்பு சிம்­பாப்வே அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொள்­ள­வுள்­ளது.

அதன்­படி இம்­மாத இறு­தியில் இலங்­கை­வரும் சிம்­பாப்வே அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்­டி­யிலும் விளை­யா­ட­வுள்­ளது.

இந்தத் தொடர் முடிந்­த­வுடன் ஜூலை மாதம் 26ஆம் திகதி இந்­திய அணி­யு­ட­னான முத­லா­வது டெஸ்ட் போட்டி நடை­பெ­றவுள்ளது.

ஜுலை மாதம் 26- ஆம் திகதி ஆரம்­ப­மாகும் இந்­திய -– இலங்கை அணி­க­ளுக்­கி­டை­யி­லான தொட­ரா­னது எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 6-ஆம் திகதி வரை நடை­பெறும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

டெஸ்ட் போட்­டிகள் கண்டி, காலி மற்றும் கொழும்பு எஸ்.எஸ்.ஸி.யிலும், ஒரு நாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் கொழும்பு, தம்புள்ளை மற்றும் பல்லேகலையிலும்  நடைபெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20