கொஸ்­க­மவில் பாரிய தீ பரவல் : ஹார்ட்வெயார், கேஸ் வர்த்­தக நிலையம் நாசம் (படங்கள் இணைப்பு)

Published By: Robert

21 Jun, 2017 | 10:21 AM
image

கொஸ்­கம - கனம்­பெல்ல சந்­தியில் உள்ள இரு வர்த்­தக நிலை­யங்­களில் நேற்று  இரவு பாரிய தீ பரவல் சம்­பவம் ஒன்று பதி­வா­னது. கொழும்பு - அவி­சா­வளை ஹை லெவல் வீதியில் உள்ள கட்­டட பொருட்­களை விற்­பனை செய்யும் ஹார்ட்வெயார் ஒன்றும் கேஸ் சிலிண்டர் விற்­பனை நிலையம் ஒன்­றுமே இவ்­வாறு தீ அனர்த்­த­த்துக்கு உள்­ளா­ன­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

நேற்று இரவு 7.30 மணி­ய­ளவில் பர­விய மேற்­படி தீயினால் பிர­தே­சத்தில் பதற்றநிலை ஒன்று தோன்­றி­ய­துடன், கனம்­பெல்ல சந்தி ஊடான போக்குவரத்தும் பொலி­ஸாரால் தடைசெய்­யப்பட்டு மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல ஏற்­பாடு செய்­யப்பட்­டன.

இந் நிலையில் தீ பர­வலை அடுத்து அவி­சா­வளை நகர சபையின் தீய­ணைப்பு வண்­டி­களின் உத­வி­யுடன் தீய­ணைப்புப் படை­யி­னரும், சாலாவ இரா­ணுவ முகாமின் வீரர்­ களும் பொலி­ஸாரும் இணைந்து தீயைக் கட்­டுப்­ப­டுத்த தொடர்ச்­சி­யாக போரிட்­டனர். சுமார் நான்கு மணி நேரத்­துக்கும் அதி கம் இவர்கள் தீயை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர பாரிய முயற்­சி­களை முன்­னெ­டுத்­தனர், எனினும் இச்­செய்தி அச்­சுக்கு போகும் போதும் தீ முழு­மை­யாக அணைக்­கப்பட்­டி­ருக்­க­வில்லை.

 திடீர் தீ பரவலுக்கான காரணம் உடன டியாக தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38