தந்தையை தீ மூட்டி மகன் கொலை செய்தாரா..? அல்லது தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டரா..? பல கோணங்களில் விசாரணை : பொகவந்தலாவையில் சம்பவம்

Published By: Robert

21 Jun, 2017 | 09:35 AM
image

பொகவந்தலாவை - பெட்றசோ டெவன் போல் பிரிவில் வீடு ஒன்றில் இருந்து தீயில் எரிந்து கருகிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேந்று மாலை மீட்கப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் சுப்பிரமணியம் மருதை (70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது தந்தை தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்தே இச்சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

இக்குடும்பஸ்த்தருக்கு பிள்ளைகள் இருந்த போது கவனிப்பார் அற்ற நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் அயலவர்கள் வழங்கிய உணவினை உண்டு வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மரணம் நிகழ்ந்துள்ளமை தொடர்பாக சந்தேகம் நிகழ்வதால் குறித்த மகன் தீ மூட்டி தந்தையை கொலை செய்தாரா அல்லது தனக்குதானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டரா தொடர்பாக பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் இன்று அட்டன் நீதவானின் கண்காணிப்பின் பின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் அட்டன் கைரேகை விசாரணை பிரிவு ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகலும் பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38