தேசிய அர­சாங்­கத்­தினால் ஸ்தாபிக்­கப்­ட­வுள்ள புதிய அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்பில் பொது மக்­களின் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்கை இன்­றைய தினம் முதல் ஆரம்­பிக்­கப்­படவுள்ளதாக அர­சாங்க தகவல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்க எதிர்­பார்க்கும் இச்­செ­யற்­றிட்­டத்தின் முதல்­கட்ட நட­வ­டிக்­கைகள்

கொழும்பு மாவட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் இவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது.

அர­சியல் அமைப்பு சாச­னத்தில் பல்­வேறு மாற்­றங்­களை உள்­வாங்கும் நோக்­குடன் தேசிய அர­சாங்­கத்­தினால் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்பில் பொது­மக்­களின் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ளும் அரசின் நட­வ­டிக்­கை­யா­னது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் குறித்த செயற்­றிட்­ட­மா­னது முதல்­கட்­ட­மாக கொழும்பில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி கருத்­துக்­களை பெறும் செயற்­பா­டா­னது இன்று 18 ஆம் திகதி முதல் எதிர்­வரும் 22ம் திகதி வரை கொழும்பு, கொம்­ப­னி­வீ­தியில் அமைந்­துள்ள விசும்­பாய அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்­பான மக்கள் ஆலோ­சனை குழு செய­லாளர் காரி­ய­ல­யத்தில் இடம்­பெறும். காலை 09.30 மணி­முதல் 4.30 மணி­வரை பொது மக்கள் தமது ஆலோ­சனை வழங்க முடியும்.

அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்­பான மக்கள் கருத்­துக்­களை உள்­வாங்கு நட­வ­டிக்கை இடம்­பெறும் இந்த செயற்­றிட்­டத்தில் அனைத்து பொது மக்­களும் இணைந்து கொள்­ளு­மாறு பொது­மக்­க­ளிடம் கோரப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்­பாக பொது மக்­களின் ஆலோ­ச­னை­களை தொலை­பேசி, தொலை­நகல் மற்றும் மின்­னஞ்சல் மூலம் முன்­வைக்க முடி­வ­தோடு தொலை­பேசி இலக்­க­மான 0112 437 676, தொலைநகல் இலக்கமான 0112 328 780 ஆகிய இலக்கங்களின் மூலம் மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என அத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.