மத்திய வருமானமீட்டுவோரின் உயர்வுக்கு பங்களிப்பு வழங்குவது மற்றும் வீட்டுத் தேவை நியமங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, இலங்கையின் முன்னணி உட்கட்டமைப்பு மற்றும் பல்துறை பொது ஒப்பத்த நிறுவனமான சர்வதேச நிர்மாண ஒன்றியத்தின் மூலமாக (ICC), நவீன walk-up தொடர்மனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

‘Mount Clifford Range’எனும் திட்டம் ICC இனால் பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் கைகோர்த்து இந்த நிர்மாண செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது. வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பிரேமதாஸவின் மேற்பார்வையில், செமட்ட செவன (அனைவருக்கும் நிழல்) எனும் நடவடிக்கையூடாக முன்னெடுக்கப்படுகிறது.

ஹோமகம பிரதேசத்தில் இயற்கைச் சூழலில் இந்த திட்டம் அமையவுள்ளது. சூழலுக்கு நட்புறவான அபிவிருத்தி செயற்பாடுகளில் ICC இன் நோக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 43 கட்டிடங்கள் இதில் அடங்கியிருக்கும் என்பதுடன், இதில் 16 தொடர்மனை அலகுகள் காணப்படும். மொத்தமாக 688 தனித்தனி அலகுகள் நிர்மாணிக்கப்படும். ஒவ்வொன்றும் தலா 5 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒவ்வொரு அலகிலும் 640 சதுர அடி கொண்ட பகுதி காணப்படும் என்பதுடன், இரு படுக்கையறைகள் ஒரு குளியலறை மற்றும் ஒரு வசிப்பறை மற்றும் பல்கனி போன்றன அடங்கியிருக்கும். மேலும், நீச்சல் தடாகம், ஜிம்னாசியம், விளையாட்டு மைதானம், பல்-நோக்கு ஜொகிங் திடல் மற்றும் மினி சந்தை போன்றன குடியிருப்பாளர்களுக்கு அனுகூலமளிக்கும் வகையில் அமைந்திருக்கும். 24 மணி நேரம் பாதுகாப்பான சூழல் காணப்படும்.

ஹோமகம நகரிலிருந்து வடக்காக பயணித்து Mount Clifford Range பகுதியை சென்றடைய முடியும். கஹாதுடுவ மற்றும் ஹொரண ஆகிய பிரதேசங்களிலிருந்து தென் பகுதியாக பயணித்து சென்றடைய முடியும். கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் இது அமைந்துள்ளதுடன், ஹோமகம சந்திக்கு 2 கிலோமீற்றருக்கும் குறைந்த தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த பிரதேசம் பல அபிவிருத்தி திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் Techno city, Institute of Technology – University of Moratuwa, NSBM Green University, Faculty of Engineering போன்றன சிலவாகும். இதன் காரணமாக ஹோமகம முன்னணி கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப நகராக மாற்றம் பெறும். மேகாபொலிஸ் திட்டத்தின் பிரகாரம் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்நடவடிக்கைகள் காரணமாக, காணி விலை அதிகரிப்பு ஏற்படும் என்பதுடன், வாழ்நாளுக்கான சில முதலீடாகவும் அமைந்திருக்கும். இந்த திட்டத்தின் முதல் கட்டம், 2019 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டு பகுதியில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்டம் 2020 2ஆம் காலாண்டில் பூர்த்தியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னணி வீடமைப்புத்திட்ட அபிவிருத்தி நிறுவனமான நிவாஸி டிவலபர்ஸ் Mount Clifford Range விற்பனை முகவராக செயற்படவுள்ளது.

251 அலகுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. சகாயமான இல்லங்களை தேடுவோருக்கு சிறந்த வாய்ப்பாக இந்த திட்டம் அமைந்துள்ளது. 35 வருட கால பரந்தளவு அனுபவத்தை கொண்டுள்ள ICC, நாட்டின் முன்னணி நிர்மாண நிறுவனமாக திகழ்வதுடன், தர நியமங்களை பேணுகின்றமைக்காகவும், உரிய காலத்தில் நிர்மாண பணிகளை பூர்த்தி செய்கின்றமைக்காகவும் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது.