ஜெயலலிதா இடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் : தொல் திருமாவளவன்

Published By: Robert

20 Jun, 2017 | 01:54 PM
image

ஜெயலலிதா என்கிற ஆளுமை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை மக்களால் சூப்பர் ஸ்டார் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ரஜினிகாந்த் நிரப்பக்கூடும் என்று விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்திருமவளவன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவித்ததாவது..

ஜெயலலிதா அம்மையார் காலமான பின்னர் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் முதல்வர் பதவிக்கான வெற்றிடத்தை அவர்கள் நிரப்பி கொண்டார்கள். ஆனால் ஜெயலலிதா என்கிற ஆளுமை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை அ.தி.மு.க.வினரால் நிரப்ப முடியவில்லை. அதனால் பலரும் அந்த இடத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ஒரு விவாதம் நடைபெறுகிறது. ஒரு வேளை அவர் அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியலில் சற்றே தாக்கம் ஏற்படுமா? என்று அப்படிப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நான் பதில் அளித்தேன். அப்போது, ரஜினிகாந்த் திரைப்பட கதாநாயகர் என்னும் வகையில் அவருக்கென தமிழக மக்கள் இடையே ஒரு செல்வாக்கு உள்ளது அதனை பயன்படுத்தி தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அவர் நிரப்பக்கூடும் என்றும் கூறினேன். 

அவர் அரசியலுக்கு வருவார் என்றும் வெற்றிடத்தை நிரப்புவார் என்றும் நான் அறுதியிட்டு கூறவில்லை. தமிழ்நாட்டு மக்களின் உளவியல் திரைப்பட கவர்ச்சியை அடிப்படையாக கொண்டே அரசியலை தீர்மானிக்கும் நிலை உள்ளது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

ரஜினிகாந்த் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கதாநாயகராக விளங்குகிறார். அவரை கதாநாயகர் என்கிற வகையில் சூப்பர் ஸ்டாராக ஏற்று இருக்கிறார்கள். ஏறத்தாழ 45 ஆண்டுகளாக தமிழகத்தில் குறிப்பாக திரைப்பட உலகத்தின் மூலம் ஆளுமை செலுத்தி வருகிறார். அத்துடன் அவரும் இந்த தேசத்தின் ஒரு குடிமகன். அரசியலில் ஈடுபட யாருக்கும் உரிமை உள்ளது. யாரையும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று தடுப்பது ஜனநாயக பண்பாகாது. ஆகவே அவர் வந்தால் வரட்டும் என்று கூறுகிறேன். அவ்வளவுதான். அவர் தமிழர் அல்லாதவர் என்பதையும் அவரை முதல்வராக்க கூடாது என்பதையும் அவர் அரசியலுக்கு வந்த பின்னர் மக்களிடம் சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது. தமிழர் அல்லாதவர்கள் அரசியலுக்கு வரவே கூடாது என்பது அரசியல் நாகரீகமல்ல. 

ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தனது ரசிகர்களை போருக்கு தயாராகுங்கள் என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறார். ஆண்டவன் என்னை இதுவரை ஒரு நடிகனாக ஆட்டி வைக்கிறார். இனிமேல் என்னை எப்படி வழி நடத்துவார் என்று எனக்கு தெரியாது என சொல்லி இருக்கிறார். ரஜினியின் இந்த பேச்சை வைத்துக் கொண்டு சிலர் ஏன் அலறுகின்றனர் என்று தெரியவில்லை. அவர் அரசியலுக்கு வருவது பற்றி எந்த கவலையும் இல்லை. அச்சமும் இல்லை. சினிமா கவர்ச்சிக்கு தமிழக மக்கள் முக்கியத்துவம் தருவதால் ரஜினியையும் இவர்கள் தூக்கி கொண்டாடுவார்கள் என்று மட்டும்தான் கருத்து சொல்லி இருக்கிறேன். அவரும் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் அரசியலுக்கு வந்தால் வரட்டும். அவரை களத்தில் சந்திப்போம் என்கிற வகையில் எனது கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.’ என்று தெரிவித்திருக்கிறார் தொல் திருமாவளவன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52