இந்­திய – அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–0 என்ற அடிப்­ப­டையில் அவுஸ்­தி­ரே­லியா கைப்­பற்­றி­யது. 3ஆவது ஒருநாள் போட்டி மெல்­போர்னில் நேற்று நடை­பெற்­றது. இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 295 ஓட்­டங்­களைக் குவித்­தது. விராட் கோஹ்லி 117 ஓட்­டங்­க­ளையும், ரஹானே (50), தவான் (68) ஓட்­டங்­க­ளையும் சேர்த்­தனர்.

இதில் உலக தர­வ­ரிசைப் பட்­டியலில் முத­லி­டத்தில் இருக்கும் அஷ்வின் இந்­திய அணியில் இடம்­பெ­ற­வில்லை. இது இந்­திய அணிக்கு சற்று பல­வீ­ன­மா­க­வே அமைந்­தது எனலாம்.

இந்­நி­லையில் ஆஸி. 296 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்­குடன் களம் இறங்­கி­யது. தொடக்க வீரர்­க­ளாக ஷேன் மார்ஷ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்­கி­னார்கள். பிஞ்ச் 21 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யேற, அடுத்து அணித் தலைவர் ஸ்மித் களம் இறங்­கினார்.

மார்ஷ்- – ஸ்மித் ஜோடி நிலை­யான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தியது. ஸ்மித் 41 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் ஆட்­ட­மி­ழந்தார். மார்ஷ் அரை­சதம் அடித்து சிறப்­பாக விளையா­டினார். இருந்­தாலும் 62 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து வந்த பெய்­லியும் ஆட்­ட­மி­ழக்க போட்டி இந்­தி­யா­விற்கு சாத­க­மான வகையில் இருந்­தது.

ஆனால் அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஆட்­டத்தின் முடிவை மாற்­றினார். அவர் அதி­ர­டி­யாக விளை­யாடி அணியை வெற்றி பெற வைத்தார். அவுஸ்­தி­ரே­லியா 49.1 ஓவர்­களில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 296 ஓட்­டங்­களைப் பெற்று 3 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது. இந்த வெற்­றி யின் மூலம் அவுஸ்­தி­ரே

லியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொட ரை 3–-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மேக்ஸ்வெல் 96 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.