உடல் எடை குறைப்பிற்கான நவீன சிகிச்சை

Published By: Robert

20 Jun, 2017 | 01:32 PM
image

இன்றைய திகதியில் உலகை அச்சுறுத்தும் நோயாக உருவெடுத்திருக்கிறது உடற்பருமன். ஒரு சிலரின் கண்டுபிடிப்புகளாலும், ஒரு சிலரின் வணிகநோக்கங்களுக்காகவும் உலகம் முழுவதும் மனிதர்களுக்கு ஆரோக்கியமற்ற மற்றும் உடலியல் சிக்கல்கள் எழக்கூடிய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதனை இளைய தலைமுறையினரும்,இணையதலைமுறையினரும் தங்களின் பொருளாதார சக்தி மற்றும் சமூகத்தின் அடையாளத்திற்காக உடலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் சாப்பிடுகிறார்கள். இதன் பக்கவிளைவாகவும், பின்விளைவாகவும் உடல் பருமன் என்ற நோயிற்கும் ஆளாகிறார்கள். 

இதனையும் மருத்துவத்துறை தன் கையிலெடுத்து இதற்குரிய தீர்வை முன்வைத்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களின் வயது, உயரம் ஆகியவற்றைப் பொருத்து இருக்கவேண்டிய உடல் எடையைக் காட்டிலும் அதிகமான எடையுடன் தான் இருக்கிறார்கள். இதில் பலரும் உடற்பருமனுக்கு முகங்கொடுக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவத்துறை இதுவரை Gastric Sleeve. Gastric Bypass. Gastric Ballon. LAP Band. Duedenal Switch. vBloc Therapy. Aspire Assist என பலவகையான சத்திர சிகிச்சைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதில் ஒவ்வொரு சத்திர சிகிச்சையும் ஒவ்வொருவருக்கே பொருத்தமாக இருக்கிறது என்றும், அனைவருக்கும் பொதுவானதாக இல்லை என்றும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான தரவுகளின் மூலம் தெரியவருகிறது. இந்நிலையில் ஒரு சிலருக்கு மேற்கூறிய பல சத்திர சிகிச்சைகளைப் பற்றி கேள்விபட்டிருப்பார்கள். இருப்பினும் உடற்பருமனுக்கான சரியான சத்திர சிகிச்சை எது என்று தெரிந்துகொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதில் அண்மையக் காலத்தில் காஸ்ட்ரிக் பலூன் என்ற சத்திர சிகிச்சை பிரபலமடைந்து வருகிறது. இவ்வகையினதான சத்திர சிகிச்சையின் போது, எம்முடைய வயிற்றுப் பகுதிக்குள் எண்டாஸ்கோப்பி முறையில் சிலிக்கானால் தயாரிக்கப்பட்ட சிறிய அல்லது நோயாளிக்கு பொருத்தமான பலூன்கள் வயிற்றுக்குள் பொருத்தப்படுகிறது. பின்னர் அந்த பலூன் ஒரு வித திரவத்தால் நிரப்பப்படுகிறது. இதன் காரணமாக உணவு உண்ணும் போது அதிகளவிலான உணவு உண்பது தடுக்கப்படுகிறது. அத்துடன் சிறியஅளவிலான உணவை சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிவிட்டது என்ற உணர்வு ஏற்படும். இதன் காரணமாக நாளடைவில் உடல் எடை குறையத் தொடங்கும். இத்தகைய சிகிச்சைக்கு பின்னரான பக்கவிளைவு குறித்த நேர்மறையான தரவுகள் இன்னும் முழுமையாக கிடைக்கப் பெறாததால் இவ்வித சிகிச்சைக்கு தற்போது ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் ஒரு சில மருத்துவ நிபுணர்கள் உடல் எடையை குறைப்பிற்கான சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் முன் ஏராளமானவர்களின் கருத்தைக் கேட்டு தீர்மானிக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

Dr. கார்த்திக்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04