ஐ.சி.சி. சம்­பயின்ஸ் கிண்ண இறுதிப் போட்­டியில்  இந்­தி­யாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபா­ர­மான வெற்­றியைப் பெற்­றது.

339 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்தக் கள­மி­றங்­கிய இந்­திய அணியின் நட்­சத்­திர வீரர்கள் அனை­வரும் விக்­கெட்­டுக்­களை அடுத்­த­டுத்து பறி­கொ­டுக்க, இந்­திய அணியின் ஹர்திக் பாண்­டியா பாகிஸ்தான் பந்­து­வீச்சை பவுண்ட்­ரி­க­ளா­கவும், சிக்­ஸர்­க­ளா­கவும் விளா­சினார்.

இந்­திய ரசி­கர்கள் பலரின் கடைசி நம்­பிக்­கை­யாக பாண்­டி­யாவின் ஆட்டம் இருந்­தது. 

எனினும் ஹர்திக் பாண்­டி­யா­வுக்கு மறு­மு­னையில் விளை­யாடிக் கொண்­டி­ருந்த இந்­திய வீரர் ஜடேஜா, இந்­திய ரசி­கர்­களின் நம்­பிக்­கையைத் தகர்த்தார்.

ஓட்டம் ஒன்­றுக்­காக ஓடு­வதில் இரு­வ­ருக்கும் ஏற்­பட்ட குள­று­ப­டியால் பாண்­டியா ரன் அவுட் ஆனார். 

பாகிஸ்­தா­னு­ட­னான பாண்­டி­யாவின் ஆட்டம் குறித்து இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­கார தனது டுவிட்டர் பக்­கத்தில்," பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக பாண்­டியா பந்தை அடித்த விதத்தை பார்க்­கும்­போது அவர் பாகிஸ்­தானின் பந்­து­வீச்­சா­ளர்­களை எதிர்­கொள்ள வித்­தி­யா­ச­மான யோசனை வைத்­தி­ருந்­தது தெரிந்­தது. 

பாண்­டியா விக்கெட் பறி­போ­னதில் ஜடே­ஜா­வுக்கு தொடர்பு உண்டு. ஜடேஜா தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்து பாண்டியாவை விளையாட அனுமதித்திருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.