பிரத்­தி­யேக வகுப்­புக்­கு சென்ற யுவ­தி கொள்­ளுப்­பிட்டி கடற்­க­ரையில் சடலமாக மீட்பு

Published By: Raam

20 Jun, 2017 | 11:54 AM
image

கொள்ளுப்பிட்டிய கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலம் வென்­னப்­புவ சால்ஸ் விலியம் மாவத்­தையில் வசித்த 25 வய­தான யுவதி என இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடந்த 15 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் அவரது சடலம் கொள்­ளுப்­பிட்டி கடலில் கரை ஒதுங்­கிய நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கடந்த வியா­ழக்­கி­ழமை  பிரத்­தி­யேக வகுப்­புக்­காக  கொழு­ம்­புக்குச் செல்­வ­தாகத் தெரி­வித்து வீட்­டி­லி­ருந்து சென்ற தமது மகள் மாலை­யா­கியும் வீடு திரும்­பா­தமையால் அவ­ரது பெற்றோர் உடனடியாக வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டின் பின்னர் இத்­த­கவல் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டு மேற்கொள்ளப்பட்ட தேடலில் கொள்­ளு­பிட்டி கடற்­க­ரையில் குறித்த யுவ­தியின் சடலம் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

தமது மக­ளுக்கு தற்­கொலை செய்து கொள்­ளு­ம­ளவு கார­ணங்கள் எதுவும் இருந்­தி­ருக்­க­வில்லை என்றும்  இந்த மர­ணத்­துக்­கான கார­ணத்தை புரிந்து கொள்ள முடி­யா­துள்­ள­தாக பெற்றோர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ளனர்.  

இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11