காதலை கைவிட மறுத்த 16 வயது சிறுவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகிலுள்ள கஞ்சவாலா பகுதியை சேர்ந்த ஜடின் என்ற 16 வயது சிறுவன், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுவனான குலாமின் தங்கையை காதலித்து வந்துள்ளான். தனது தங்கையை காதலிப்பதை நிறுத்திவிடுமாறு குலாம் பலமுறை ஐடினிடம் கூறியும் அவன் கேட்கவில்லை.

இதனால், தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்று, என் தங்கச்சியை காதலிக்காதே என்று சொன்னால் கேட்க மாட்டியா, என்று கேட்டுவிட்டு ஜடினின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளான். சிறுவன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

பின்னர் இந்த சம்பவத்தை ஒரு நண்பரிடம் சொல்லி,கொலையாளியான சிறுவன் தப்பிக்க என்ன செய்யலாம் என்று கேட்டுள்ளனர். அந்த சிறுவன், பொலிஸ் உதவி ஆய்வாளரின் மகன் என்பதால், நான் இதனை எனது தந்தையிடம் தெரிவிக்கிறேன், என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு தனது அப்பாவிடம் இந்த சம்பவத்தை கூறியுள்ளான்.

இதனைத்தொடர்ந்து, அந்த பொலிஸ் ஆய்வாளர், பாழடைந்த பங்களாவுக்கு சென்று, அங்கு பலியாகி இருந்த ஜடினின் உடலை கைப்பற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது, அந்த 4  சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.