வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் த.தே.கூ. தலைவர் இரா.சம்பந்தன்  விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை  கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்களின் கையெழுத்துடன் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.