எம்.எம்.மின்ஹாஜ்

மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்கேற்ப எம்மால் தேர்தலை நடத்த முடியாது. எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக உள்ளோம். இதன்படி விரைவில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

Image result for எரான் விக்கிரமரத்ன virakesari

பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.