பாரதீய ஜனதாக் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தலித் குடும்பத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எதிர்க் கட்சிகளின் பல தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தங்கள் கட்சியின் தலைவர்களிடம் கலந்தாலோசித்தும் இந்த வேட்பாளரை முடிவு செய்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இம் மாதம் 23 ஆம் தேதியன்று ராம்நாத் கோவிந்த் வேட்புத் மனு தாக்கல் செய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அமித் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.