பீகார் தெற்கு பகுதியிலுள்ள லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியை இனந்தெரியாத நபர்கள் ஓடும் ரயிலில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் அக்கிராமத்தில் குழப்பநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவி வீட்டை விட்டு வெளியே வந்த போது மர்ம நபர் ஒருவரால் கடத்தபட்டுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர் பாடசாலை மாணவியை ரயிலில் ஏற்றி, ஓடும் ரயில் வைத்து அந்த பாடசாலை மாணவியை 6 பேர் கொண்ட ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

பின்னர் அந்த மாணவியை குறித்த கும்பல் ஓடும் ரயிலில் இருந்து வெளியில் வீசியுள்ளனர். இதில் பலத்த காயங்களுக்குள்ளாகி உயிருக்கு போராடிய மாணவியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பாட்னா வைத்திய கல்லூரி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

குறித்த மாணவியின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.