(ஆர்.யசி)

வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல. சிங்கள, முஸ்லிம் மக்களும்  வடக்கில் தைரியமாக வாழ முடியும் ஆகவே வடக்கை தமிழர்கள் உரிமை கூற முடியாது என ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

சிங்கள பௌத்த இனவாதத்தை கட்டுப்படுத்த முன்னர் வடக்கில் தமிழர்களின் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஜாதிக ஹெல உறுமைய அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.