மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவின் வேண்டுகோளுக்கமைய ஜப்பான் - இலங்கை நட்புறவு மன்றத்தினால் 450 இலட்சம்  பெறுமதியான தீயணைப்பு இயந்திரம் மற்றும் 350 இலட்சம் பெறுமதியான நவீன தொழிநுட்பத்துடனான அம்பியூலன்ஸ் ஆகியவை இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அவற்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜப்பான் இலங்கை நட்புறவு மன்ற தலைவர் கலாநிதி லால் திலகரத்ன மற்றும் எரங்கா திலகரத்ன ஆகியோரால் அவற்றுக்குரிய ஆவணங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.