வட­மா­காண முத­ல­மைச்சர்,  அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக எடுத்த   நட­வ­டிக்­கையைத் தொடர்ந்து  தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்­களால்  அவ­ருக்கு எதி­ராக  கொண்­டு­வ­ரப்­பட்ட  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை அடுத்து  எழுந்­துள்ள  சர்ச்­சைக்கு   இன்­னமும் தீர்வு காணப்­பட­வில்லை.  இரு­த­ரப்­பிற்­கு­மி­டையில்  சம­ரச முயற்­சிகள்  தொடர்­கின்ற போதிலும்  இரு­த­ரப்­பி­ன­ருமே  உரிய விட்­டுக்­கொ­டுப்­புக்­களை  மேற்­கொள்­வதில்   பின்­ன­டிப்­ப­தனால்  இத்­த­கைய   நிலை  தொடர்ந்து வரு­கின்­றது. 

வட­மா­காண சபை அமைச்­சர்கள் மீது   இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­ட­மை­யினால்   அது­ கு­றித்து விசா­ரிக்க   முதல்வர் விக்­கி­னேஸ்­வரன்  விசா­ர­ணைக்­கு­ழு­வொன்றை நிய­மித்தார். இந்­தக்­குழுவின் அறிக்­கையை அடுத்து இரு அமைச்­சர்­களைப் பதவி வில­கு­மாறு அறி­வித்த முத­ல­மைச்சர் மற்­றைய இரு அமைச்­சர்கள் மீதும்   மீண்டும் விசா­ரணை இடம்­பெறும் என்றும் அது­வரை அவர்கள் கட்­டாய ஓய்வில்  இருக்­க­வேண்­டு­மென்றும்  அறி­வித்­தி­ருந்தார்.  முத­ல­மைச்­சரின் இந்த தீர்­மா­னத்தை அடுத்து தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்­க­ளினால்   அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.  இதனால்  மக்கள் மத்­தியில்  பெரும் கொந்­த­ளிப்­பான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. 

இத­னை­ய­டுத்து இந்த விட­யத்­திற்கு   சம­ரச  தீர்வை காண்­ப­தற்கு  தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும்  எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன்  முன்­மு­யற்சி எடுத்­தி­ருந்தார்.  புௌாட் அமைப்பின் தலை­வரும், யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்கம் சித்­தார்த்­தனை அனுப்பி  முத­ல­மைச்­ச­ருடன்   சம­ரசப் ­பேச்­சினை மேற்­கொண்டார். 

இத­னை­ய­டுத்து  முத­ல­மைச்­ச­ருடன் தொலை­பே­சியில் பேசிய எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன்  குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­ப­டாத  இரண்டு அமைச்­சர்­களை விடு­மு­றையில் அனுப்பும் விட­யத்தில் விட்­டுக்­கொ­டுப்­பினை மேற்­கொள்­ளு­மாறு கோரி­யி­ருந்தார். இதற்கு இணங்­கிய முத­ல­மைச்சர், ஆனால் குறித்த இரண்டு அமைச்­சர்­களும் விசா­ர­ணைக்கு பங்கம் மேற்­கொள்­ள­மாட்டோம் என்ற உறு­தி­மொழிக் கடி­தங்­களை வழங்­க­வேண்­டு­மென்று கேட்­டி­ருந்தார். ஆனால்  இத்­த­கைய  கடி­தங்­களை வழங்க  இந்த அமைச்­சர்கள்  இணங்­கி­யி­ருக்­க­வில்லை. இதனால் சர்ச்சை நீடித்து வந்­தது. 

இந்த நிலை­யில்தான்  கடந்த வெள்­ளிக்­கி­ழமை  மாலை  எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன்   முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு   கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்தார்.  இந்தக் கடி­தத்தில்  விசா­ர­ணைக்­கு­ழு­வினால் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­ப­டாத இரு அமைச்­சர்கள் தொடர்பில் தேவை­யான  உட­னடித் திருத்த நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும்   இத்­த­கைய நட­வ­டிக்கை   தாங்கள் எதிர்­கா­லத்தில் மேற்­கொள்ளும்  விசா­ர­ணை­க­ளுக்கு எந்­த­வித  தடை­யையும் ஏற்­ப­டுத்­தாது என்று    தான் உறு­தி­ய­ளிப்­ப­தா­கவும்  சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். 

இந்தக் கடி­தத்தை அடுத்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும்  கட்­சி­க­ளான  புௌாட்,  ரெலோ,  ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய  கட்சித் தலை­வர்­களை  நேற்று  முன்­தினம் மாலை சந்­தித்த முத­ல­மைச்சர்   எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்பந்­தனின் கடி­தத்­திற்கு பதில் கடிதம் ஒன்­றையும் அனுப்­பி­வைத்­தி­ருந்தார். இந்த கடி­தத்தில்   குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­ப­டாத இரண்டு அமைச்­சர்கள் மீதான  விசா­ர­ணையின் போது   அவர்கள்  விசா­ர­ணைக்கு பங்­கத்தை ஏற்­ப­டுத்­த­மாட்­டார்கள் என்ற உறு­தி­மொ­ழியை    தாங்கள் தர­வேண்டும் என்றும்  அவ்­வாறு உறு­தி­மொழி வழங்­கினால்  தனது  கட்­டாய விடு­முறை குறித்த முடி­வினை மீள் பரி­சீ­லனை செய்­வ­தாக   முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.  இத­னை­விட சம்­பந்தன் எம்.பி. யின் கடி­தத்தில்   நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்பில் குறிப்­பி­டாமை  குறித்தும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். 

இவ்­வா­றான நிலையில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் கடி­தத்­திற்கு நேற்று  எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் பதில் கடிதம்  அனுப்பி வைத்­துள்ளார்.  இந்தக் கடி­தத்தில்   மாகா­ண­சபை  அமைச்­சர்­களின் சார்பில்  தான் எவ்­வாறு உறு­தி­மொ­ழியை வழங்­கு­வது என்று  கேள்வி  எழுப்­பி­யுள்­ள­தாக   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன்  முத­ல­மைச்சர் கோரிய  உறு­தி­மொழியை  வழங்­கா­மை­யினால்  நில­வி­வ­ரு­கின்ற   சர்ச்­சைக்கு  முடிவு ஏற்­ப­டுமா என்ற  சந்­தேகம்  தற்­பொ­ழுது எழுந்­துள்­ளது. 

உண்­மை­யி­லேயே வட­மா­காண சபையில்  ஆளும் கட்­சிக்குள்  எழுந்­துள்ள  இந்த  சர்ச்­சை­யா­னது பெரும்  அதிர்­வ­லை­களை  மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.  இரு­த­ரப்­பி­னரும் ஏட்­டிக்­குப்­போட்­டி­யாக  செயற்­பட்டு வரு­வ­தனால்  மக்கள் மத்­தியில்   பெரும்  கொந்­த­ளிப்­பான நிலை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.  இத­னால்தான் முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக  கடந்த இரு தினங்­க­ளாக  பெரும் போராட்­டங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.  

இந்த நிலையில்  எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனும்  முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனும்   விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளை­மேற்­கொண்டு பிரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்­டி­யுள்­ளது.  ஆனாலும்  அந்த விட­யத்­திலும் கூட இழுத்­த­டிப்­புக்கள்  மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.  இதனால்  மக்கள் மத்­தியில் அதி­ருப்தி நிலை  காணப்­ப­டு­கின்­றது. 

இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு  காணப்­ப­டா­விடின்  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீது   வாக்­கெ­டுப்பு நடத்­த­வேண்­டிய சூழல் ஏற்­படும். இவ்­வாறு   வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­மானால்  எந்தத் தரப்பு  வெற்­றி­பெற்­றாலும்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்குள்  பிளவு என்­பது  உரு­வா­கி­விடும்.  ஏனெனில்  முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும்   மூன்று கட்­சி­க­ளான  ரெலோ, புௌாட்,  ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகி­ய­வற்றின் உறுப்­பி­னர்கள்  முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர். தமி­ழ­ர­சுக்­கட்­சியை சேர்ந்த சிலரும் இந்த மூன்று கட்­சி­களைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளு­மாக 15 பேர் ஒன்­றி­ணைந்து முத­ல­மைச்சர்  மீது நம்பிக்கை தெரி­வித்து ஆளு­ந­ரி­டத்தில் மக­ஜர்­களை சமர்ப்­பித்­துள்­ளனர். 

இதே­போன்று, இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியை சேர்ந்த உறுப்­பி­னர்­களும்  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை   சமர்ப்­பித்து  தமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்து வரு­கின்­றனர்.  இந்­த­நி­லையில்  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கு­மாறு ஆளுநர் அழைப்பு விடுத்தால்  பிளவு என்­பது நிச்­ச­ய­மாகும்.  இது  தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை  சித­ற­டிக்கும் நட­வ­டிக்­கை­யா­கவே  அமையும். 

எனவே,  தற்­போ­தைய நிலையில் இரு­த­ரப்­பி­னரும்  ஏட்­டிக்­குப்­போட்­டி­யான நிலைப்­பா­டு­களை கைவிட்டு  சம­ர­சத்­திற்கு  வர­வேண்டும்.  கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை  முத­ல­மைச்­ச­ருக்கு எழு­தி­யி­ருந்த கடி­தத்தில் கூட்­ட­மைப்புத் தலைவர் இரா. சம்­பந்தன்  விசா­ர­ணைக்­குழு­வினால்  குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­ப­டாத இரு  அமைச்­சர்கள் மீதான  கட்­டாய விடு­முறை  முடிவை  திருத்­திக்­கொள்­ளு­மாறும்  இதனால்   எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­படும் விசா­ர­ணை­க­ளுக்கு எந்­த­வித தடை­யையும் ஏற்­ப­டுத்­தாது என்­பதை  கூறிக்­கொள்ள விரும்­பு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார். 

இதி­லி­ருந்து  விசா­ர­ணைக்கு  இரு அமைச்­சர்­களும்  பங்கம் விளை­விக்­க­மாட்­டார்கள்  என்ற  உறு­தி­மொ­ழியை சம்­பந்தன்   எம்.பி.  சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.  ஆனால், அதற்குப் பின்­னரும்  இரு அமைச்­சர்கள்  விட­யத்தில்   எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் உத்­த­ர­வாதம் அளிக்­க­வேண்­டு­மென்று  முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன்  கோரிக்கை விடுத்­தி­ருந்­ததும்  அதற்கு பதி­ல­ளித்த  எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் அவ்­வாறு  உறு­தி­மொ­ழியை எப்­படி வழங்­கு­வது என்று கேள்வி எழுப்­பி­யி­ருப்­பதும்  முன்­னுக்குப் பின் முர­ணான விட­யங்­க­ளா­கவே   அமைந்­தி­ருக்­கின்­றன. 

இறுதி யுத்­தத்தில்  விடு­த­லைப்­பு­லிகள்  முற்­றாக அழிக்­கப்­பட்ட பின்னர்  வடக்கு, கிழக்கு  தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பே திகழ்ந்து வருகின்றது.  கடந்த காலத்தில் இடம்பெற்ற  மாகாண சபைத் தேர்தலாகட்டும் பாராளுமன்ற தேர்தல்களாகட்டும்   தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கே அந்த மக்கள் பேராதரவை வழங்கியிருந்தனர்.  வடமாகாண சபை தேர்தலிலும்   முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டமைப்பினரை   பெருவெற்றிபெறச் செய்து  மாகாண சபை அரசாங்கத்தை மக்கள் அமைத்திருந்தனர். இந்த மாகாணசபை அரசாங்கம்  உரிய வகையில்   செயற்படும் என்று  அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.  ஆனால்  அங்கு  இலஞ்சம் ஊழல், அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றமை தொடர்பில் மக்கள்  பெரும் கவலை அடைந்துள்ளனர்.  இந்த நிலையில்   மாகாணசபையின் ஆளும் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவதையோ அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிளவுபடுவதையோ மக்கள் விரும்பவில்லை.  

எனவே, மக்களின்  விருப்பத்திற்கிணங்க  இருதரப்பினரும்  ஏட்டிக்குப்போட்டியாக செயற்படாது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு சர்ச்சைக்கு தீர்வு காணவேண்டியது அவசியம்.

இன்றைய வீரகேசரியின் ஆசிரிய தலையங்கம்