ஒற்றையாட்சி மாறாது ; பிரதமர் அறிவிப்பு

Published By: Raam

18 Jan, 2016 | 07:44 AM
image

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை 21 ஆம் நூற்­றாண்­டுக்கு ஏற்றால் போல் தயா­ரிக்க உள்ளோம். இதன்­போது மக்­களின் கருத்­துக்­க­ளுக்கே பெரும் முக்­கி­யத்­துவம் அளித்து செயற்­ப­டுவோம். நான் ஒரு இலங்­கை­யன். இந்த நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்கமாட்டேன் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

நாட்டில் வாழும் அனைத்து இனத்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதற்கு எனக்கு இட­ம­ளி­யுங்கள். ஒற்­றை­யாட்­சிக்கு முர­ணான அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கமாட்டோம். மக்­களை குழப் பும் வகையில் வீணான எதிர்ப்­பு­களை உட­ன­டி­யாக கைவி­டு­மா­று­ கோ­ரு­கின்றேன். உலக வர­லாற் றில் முதல் முறை­யாக இலங்­கை­யி­லேயே சமூக வலைத்­த­ள­ங்­களின் ஊடாக யோசனை பெறப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பிர­தமர் கூறினார்.

மேலும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபைக்­கான பிரே­ரணை தொடர்பில் திருத்­தங்கள் இருப்­பினும் சமர்ப்­பிக்க முடியும். அதனை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். எனினும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபைக்குட்­பட்­ட­தாக குறித்த யோச­னைகள் அமைய வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர் பில் நேற்று அலரி மாளி­கையில் ஊட­கவி­ய­லா­ளர்கள் முன்னிலை யில் விசேட உரை­யாற்­றியபோதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டின் அதி­யுச்ச அதி­கா­ரங்­களின் பிர­தான உரி­மை­யா­ளர்கள் பொது மக்­க­ளாவர். ஆகவே மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவே அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது. ஒழுக்­க­வி­ய­லுக்கு உட்­பட்ட வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். மக்­க­ளுக்­கான அர­சி­ய­ல­மைப்­பினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றுவோம். இதன்­பின்னர் மக்­களின் கருத்­துக்­களை வினவும் நோக்­குடன், அர­சி­ய­ல­மைப்­பினை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு உட்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். ஆகவே புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்கு நாட்டு மக்­களின் கருத்­துக்­களும் ஆத­ரவும் மிகவும் அவ­சி­ய­மாகும்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிக்கும் போது முழு பாரா­ளு­மன்­றத்­தி­னதும் ஒத்­து­ழைப்­பினை நாம் எதிர்­பார்க்­கின்றோம். இதனை அடிப்­ப­டை­யாக கொண்டே முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றி­ய­மைக்க உள்ளோம். எனினும் முழு பாரா­ளு­மன்­றத்­தி­னையும் அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான பணியில் ஈடுப்­ப­டுத்தும் திட்­டத்­திற்கு எதி­ர­ணி­யினர் பெரும் எதிர்ப்­பினை வெளி­யி­டு­கின்­றனர்.

அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்கு 225 எம்.பி. க்களி­னதும் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மில்லை. மாறாக 25 அல்­லது 30 பேர்­க­ளி­னது அல்­லது பாரா­ளு­மன்­றத்­தையும் பிர­தி­நி­தித்­து­வப்­படும் நான்கு கட்­சி­க­ளி­னது யோச­னைகள் மாத்­திரம் போது­மா­னது என்று கூறு­வதில் எமக்கு பிரச்­சினை கிடை­யாது. அர­சி­ய­ல­மைப்பில் எதி­ர­ணி­யி­ன­ரது யோச­னை­களும் உள்­ள­டக்­கப்­பட வேண்­டு­மாயின் வீண் கூச்சல் இடாது அமை­தி­யாக இருக்க வேண்டும். நாம் அனைத்து பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­களின் ஒத்­து­ழைப்­பி­னையும் எதிர்ப்­பார்­கின்றோம். அவ்­வா­றாயின் தேவை­யற்ற முறையில் எதிர்ப்­புகள் வெ ளியி­டு­வ­தனை எதி­ர­ணி­யினர் நிறுத்­திக்­கொள்ள வேண்டும். அவர்­க­ளையும் எமது வேலைத்­திட்­டத்தில் இணைத்துக் கொள்­ளவே நாம் முற்­ப­டு­கின்றோம்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் போது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்து கட்­டவே மக்­களின் ஆணையை கோரினோம். இதன்­படி தேர்­தலின் பின்னர் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்த்­தச்­சட்­டத்தின் ஊடாக நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்ட போதிலும் நீதி­மன்றம் அதற்கு தடை­வி­தித்­தது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையின் அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் நீக்­கு­வ­தாயின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பினை நடத்த வேண்டும் என உயர்­நீ­தி­மன்ற உத்­த­ர­விட்­டது. இதன்­பி­ர­கா­ரமே 19 ஆவது திருத்­ததை நிறை­வேற்­றினோம்.

இந்­நி­லையில் தற்­போது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கி­விட்டு, புதிய தேர்தல் முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். இதற்­கான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலைவர் மாது­லு­வாவே சோபித தேரர் கால­மா­கிய பின்னர் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்தார்.

இதன்­படி புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­காக மாது­லு­வாவே சோபித தேரரின் ஆலோ­ச­னையின் பிர­காரம் முழு பாரா­ளு­மன்­றத்­தையும் இதற்­காக முழு­மை­யாக ஈடு படுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் போது இலங்­கையின் வர­லாற்றை நாம் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். சோல்­பரி ஆணைக்­கு­ழு­வினால் அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது அரச சபையில் அனை­வ­ரி­னதும் ஆலோ­ச­னை­க­ளையும் பெறப்­பட்டே அரச மந்­தி­ரிகள் சபை உரு­வாக்­கப்­பட்­டது.

அதே­போன்று 1972 ஆம் ஆண்டில் இலங்­கையின் முத­லா­வது குடி­ய­ரசு யாப்பு தயா­ரிக்­கப்­படும் போது முன்னாள் பிர­தமர் சிறி­மாவோ பண்­டா­நா­யக்க அர­சி­ய­ல­மைப்பு பேர­வையை கொண்டு அதன் பணி­களை கொண்டு சென்றார். இதன்­போது அனைத்து கட்­சி­க­ளி­னதும் ஆலோ­ச­னையும் கோரப்­பட்­டன. எனினும் இதன்­போது எம்மால் முன்­வைக்­கப்­பட்ட அனைத்து யோச­னை­களும் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. அந்த விட­யத்தில் எமக்கு எந்­த­வொரு ஆட்­சே­ப­னையும் கிடை­யாது.

1978 ஆம் ஆண்டின் போது பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 6 இல் 5 பெரும்­பான்­மையை பெற்று ஆளும் கட்­சியில் அமர்ந்­தது. தமிழர் விடு­தலை கூட்­டணி பிர­தான எதிர்க்­கட்­சி­யாக அமர்ந்­தது. இதன்­போது எதிர்க்­கட்சி தலை­வ­ராக அமர்­த­லிங்கம் பத­வி­வ­கித்­தி­ருந்தார்.

ஆகவே அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்கு முழு பாரா­ளு­மன்­றத்­தையும் ஈடு­ப­டுத்த நாம் திட்­ட­மிட்ட போதிலும் எமது வேலைத்­திட்­டத்­திற்கு எதிர்க்­கட்சி தலைவர் அன்று இணக்கம் தெரி­விக்­க­வில்லை. தனி­நாட்டை அமைப்­ப­தற்கே எமக்கு மக்கள் ஆணை வழங்­கி­யுள்­ளனர் என்றும் ஆகையால் அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டத்­திற்கு பூரண எதிர்ப்­பினை வெளி­யி­டு­வ­தா­கவும் அன்று எதிர்க்­கட்சித் தலைவர் அமிர்­த­லிங்கம் கூறினார். ஆகையால் அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­க­வ­தற்­காக சம்­பி­ர­தா­யப்­பூர்வ வழி­மு­றை­யான தெரி­வுக்­குழு செயல்­மு­றையின் ஊடாக அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரித்தோம்.

இதன்­போது அர­சியல் யாப்­பிற்கு விரோ­த­மான முறையில் ஏதா­வது நிறை­வேற்­று­வ­தாயின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும். இதற்­க­மை­யவே பாரா­ளு­மன்ற தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்ல வேண்­டி­யேற்­பட்­டது. இந்த அர­சி­ய­ல­மைப்பு ஜன­நா­யக முறை­மையின் கீழ் தயா­ரிக்­கப்­பட்­டாலும் பல்­வேறு பிரச்­சி­னைகள் இதன் மூல­மாக ஏற்­பட்­டது.

ஆனாலம் எம்மைப் பொறுத்­த­வ­ரையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்கு அனைத்து கட்­சி­க­ளி­னதும் ஆத­ர­வி­னையும் நாம் கோரி­யுள்ளோம். இந்­நி­லையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யையும் , விருப்பு வாக்கு முறை­மையும் நீக்­கு­வ­தற்கு விசேட அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை நவம்பர் 16 ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவை போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சமர்ப்­பித்­தி­ருந்தார். புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான பணிகள் தொடர்பில் அனைத்து அர­சியல்க் கட்­சி­க­ளு­டனும் ஆறு தட­வைகள் நானே பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளேன்.

இதன்­பி­ர­காரம் அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்கு பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வினை நிறு­வினோம். நாட்டு மக்கள் அனை­வ­ரி­னதும் கருத்­துக்­களை வின­வு­வ­தற்கு நாம் திட்­ட­மிட்­டுள்ளோம். புதிய அர­சி­ய­ல­மைப்பின் போது பொது­மக்­க­ளி­னது கருத்­து­க­ளுக்கு பெரு­ம­ளவில் முக்­கி­யத்­துவம் அளிக்க உள்ளோம். அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபைக்­கான பிரே­ர­ணையின் ஊடாக புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான படி­மு­றைக்கே பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி கோர­வுள்ளோம்.

இதே­வேளை அர­சி­ய­மைப்பு நிர்­ணய சபை அர­சி­ய­ல­மைப்­பிற்கு விரோ­த­மான முறையில் நிறு­வப்­ப­ட­வுள்­ள­தாக எதி­ர­ணி­யின குற்றம் சுமத்­து­கின்­றனர். இது முற்­றிலும் தவ­றான கருத்­தாகும். 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் 74 ஆவது ஷரத்தின் பிர­கா­ரமே அர­சி­ய­ல­மைப்பு பேர­வையை நிறு­வி­யுள்ளோம். இதன்­படி பாரா­ளு­மன்­றத்­திற்­கான செயற்­பா­டு­களை விரி­வுப்­ப­டுத்­து­வ­தாயின் விசேட பிரே­ரணை மூல­மாக அதனை நிறை­வேற்றிக் கொள்ள முடியும் என்­ப­தற்­க­மைய அர­சி­ய­ல­மைப்பு நிர்­யண சபையை நிறுவும் தீர்­மா­னத்­திற்கு நாம் வந்­துள்ளோம்.

அத்­துடன் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வினை அமைப்­ப­தற்கு பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­ட­ளையில் அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை. எனினும் அர­சி­ய­ல­மைப்பின் 74 ஆவது உறுப்­பு­ரையின் பிர­கா­ரமே தெரி­வுக்­குழு முறை­மை­யினை கொண்டு வந்தோம். ஆகவே நிலை­யியல் கட்­ட­ளை­யினால் குறிப்­பி­டாத தெரி­வுக்­கு­ழு­வினை 74 ஆவது உறுப்­பு­ரையின் கீழ் கொண்டு வர­மு­டி­யு­மாயின், ஏன் முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக அங்­கீ­க­ரிக்க முடி­யாது. தெரிவு குழு முறைமை சரி­யாயின் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையும் சரி­யா­ன­தே­யாகும்.

அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை தொடர்பில் அர­சியல் கட்­சி­க­ளு­ட­னான சந்­திப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் ஒன்­பது திருத்­தங்­களை முன்­வைத்­துள்­ளனர். திருத்­தங்­களை முன்­வைப்­பதில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் கிடை­யாது. எனினும் குறித்த திருத்­தங்கள் அனைத்தும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபைக்கு உட்­பட்­ட­தாக இருக்க வேண்டும். அனைத்து அர­சியல் கட்­சி­யி­ன­ரி­னதும் யோச­னை­களை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம்.

ஆகவே அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை தொடர்பில் பார­ரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட பிரே­ரணை அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான செயல்­மு­றை­யாகும். இது அர­சி­ய­ல­மைப்பு அல்ல. இதன்­பி­ர­காரம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை தொடர்­பி­லான பிரே­ரணை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றுவோம். இதன்­பின்னர் மக்­களின் கருத்­துக்­களை ஏற்­றுக்­கொள்ள உள்ளோம். சிறிய அறைக்குள் முடங்கி கிடந்து அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்க என்னால் முடி­யாது.

இம்­முறை உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் முன்­னெ­டுக்­கப்­ப­டாத வகையில், சமூக வளை­யத்­த­ங­களின் ஊடாக மக்கள் தமது கருத்­துக்­களை முன்­வைக்க முடியும். இத­னூ­டாக அர­சி­ய­ல­மைப்பின் தயா­ரிக்கும் போது இளை­ஞர்­களின் பங்­க­ளிப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும் திட்­ட­மிட்­டுள்ளேன். இந்த நாட்டை பொறுப்­பேற்க உள்­ள­வர்கள் தற்­போ­தைய இளை­ஞர்­க­ளாகும். அவர்­களின் ஒத்­து­ழைப்பு மிகவும் அவ­சி­ய­மாகும்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிக்கும் போது நாட்டை பிள­வு­ப­டுத்த முனைய போவ­தில்லை. ஒற்­றை­யாட்­சிக்கு உட்­பட்டே அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்போம். நான் ஒரு இலங்­கை­ய­ராகும். இந்த நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றினைத்து தேசத்தை ஐக்கியப்படுத்துவற்கு எனக்கு அனைவரும் இடமளிக்க வேண்டும். நான் நாட்டை பிளவுப்படுத்துவற்கு ஒருபோதும் விடமாட்டேன்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக சர்வதிகாரம் மேலோங்க செய்யப்பட்டது. ஆனால் நாம் அடுத்த முப்பது வருடங்களுக்கு நாட்டை நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வரவே முனைகின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் வீணான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம். எமது வேலைத்திட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பினை நல்க வேண்டும். வெறுமனே குறுகிய சிந்தனைகளுக்கு வீதியிலறங்கி போராடுபவர்களை அரசாங்கம் கண்டுக் கொள்ளாது. அரசியலமைப்புக்கு எதிராக ஊடகங்களில் பிரதானமானவராக முன்னிலைப்படுத்தப்படுபவர் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் என்பது நகைப்புக்குரியதாக மாறியுள்ளது. ஊடகஙகளுக்கு வேறு எவரும் கிடைக்கவில்லையா என்றார்.

இந்நிலையில் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றால் போல் அரசியலமைப்பு உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஆகவே புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவாக மக்கள் தங்களுடைய கருத்துக்களை மின்னஞ்சல் , தொலைநகல், முகநூல்களினூடாக முன்வைக்க முடியும். தற்போதைக்கு வயோதிப நிலையிலுள்ளவர்களின் கருத்துக்களை வினவுவதற்காகவே வீடு வீடாக சென்று கருத்துக்களை கோருவதற்கு விசேட குழு நிறுவப்பட்டுள்ளது.

எனவே புதிய அரசியலமைப்பிற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04