(எம்.எப்.எம்.பஸீர்)

இன, மதவாதங்களை தூண்டும் வண்ணம் கருத்து வெளியிடுவதாக கூறப்படும்  அரசியல்வாதிகள் பலர் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களின் இனவாதம் மதவாதம் பேசுவோர், பரப்புவோரை விஷேட பொலிஸ் குழுவொன்று கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி இன்று தெரிவித்தார்.