எம்.எம்.மின்ஹாஜ்

நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு முனைபவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . 

இது தொடர்பாக எமது கட்சி கடுமையாக எதிர்ப்பினை வெளியிடுவதுடன் இது தொடர்பாக தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.இனவாதம் இல்லாதொழிப்போம் என தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு ஆட்சேபனமும் இல்லை. எமது கட்சி இரட்டை நிலைப்பாட்டில் இல்லை. என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.

தற்போது நாட்டில் நிலவும் இன ரீதியான முறுகல் நிலை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம இன்று ஊடகங்களுக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.