ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறு­வ­ன­மா­னது, இலங்­கையில் முதன் முறை­யாக இடம்­பெறும் fibre optic broadband ஊடான எதிர்­காலத் தலை­மு­றையின் கேமிங் போட்டித் தொடரை நடத்த உத்­தே­சித்­துள்­ளது.

இது, ஒரு உணர்ச்­சி­பூர்­வ­மான தொட­ராக அமை­வது உறு­தி­யாகும். அனைத்து முழு­நேர கணி­னிசார் விளை­யாட்டு நிபு­ணர்­க­ளுக்கும் (hard-core gamers) இது­வொரு திறந்த சவா­லாகும்.

இந்த SLT e-Sports சம்­பி­யன்­ஷிப்பில் தனித்­த­னி­யா­கவோ, குழுக்­க­ளா­கவோ பங்­கு­பற்றி, நேருக்கு நேர் மோதி, திற­மை­க­ளையும், சாது­ரி­யத்­தையும் வெளிப்­ப­டுத்த முடியும். இந்தப் போட்டித் தொடரின் வெற்­றி­யா­ளர்கள் ஒரு மில்­லி­ய­னுக்கும் அதிகம் பெறு­மதி வாய்ந்த பணப் பரி­சு­க­ளுடன், மேலும் கவர்ச்­சி­க­ர­மான ஏனைய பரி­சு­க­ளையும் வென்­றி­டு­வார்கள்.

அத்­துடன் தொலைத் தொடர்­புத்­து­றையின் ஜாம்­ப­வா­னான SLT, இவர்­க­ளுக்­கென்றே அதிக செயற்­பாடு கொண்ட விசேட அம்­சங்­களை ‘Online- gaming’ க்கு பிரத்­தி­யே­க­மாக செயற்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் அறி­விக்­கி­றது.


போட்டித் தொடரின் நடு­வர்­க­ளாக e-Sports SLT யின் இந்­நி­கழ்­வுக்­கான பங்­கா­ளி­க­ளான ரெட்லைன் ரெக்னோ­லஜீஸ் நிறு­வ­னமும், சிபோஸ் நிறு­ வ­னமும் செயற்­ப­டு­வ­தோடு, குறிப்­பிட்ட கணி­னிசார் விளை­யாட்­டுக்­களின் முகா­மைத்­து­வத்­தையும் இவர்­ களே மேற்­கொள்­வார்கள். குழு அடி ப்படையிலான போட்டிகளுக்கு முன்பதிவு அவசியமாகும். தனிப் பட்ட ரீதியிலான போட்டிகளுக்கு நுழைவின் போது பதிவு செய்து கொள்ள முடியும்.