டாக்டர் கீதா ஹரிப்­ரியா தலை மையி­லான சென்னை பிரசாந்த் செயன்­முறைக் கருத்­த­ரிப்பு நிலை­யத்தின் சிறப்பு மருத்­து­வர்கள் கண்­டியில், இம்­மாதம் 24, 25ஆம் திக­தி­களில் நடை­பெறும் மருத்­துவ முகாம் ஒன்றில் கலந்­து­கொள்­கி­றார்கள். அது குறித்த சில விளக்­கங்­களை டாக்டர் கீதா ஹரிப்­ரியா வீர­கே­ச­ரிக்குத் தெரி­வித்­தி­ருந்தார்.

“வரு­டங்கள் கடந்­து­சென்­றாலும் மடியில் ஒரு குழந்தை இல்­லையே என இலங்­கையில் பல தம்­ப­தி­யினர் வாடு வதை அனு­ப­வ­பூர்­வ­மாகக் காண்­கிறேன். இத­னால்தான் நானும், என் சார்பில் எனது மருத்­து­வ­ம­னையின் மருத்­து­வர்­களும் தொடர்ச்­சி­யாக இலங்­கைக்கே வருகை தந்து குழந்­தைப்­பே­றற்ற தம்­ப­தி­யி­னரைச் சந்­தித்து வரு­கிறோம். அதன் தொடர்ச்சி யாகவே கண்­டி­யிலும் ஒரு மருத்­துவ முகாமை நடத்தத் தீர்­மா­னித்தோம்.

“செயன்­முறைக் கருத்­த­ரிப்பு மூலம் கருத்­த­ரிக்க வாய்ப்­பி­ருக்கும் பலரும் கூட வீண் சந்­தே­கங்கள், செலவு குறித்த அச்­சம் கார­ண­மாக மகப் பேற்றுச் சிகிச்­சை­களைத் தள்ளிப் போட்டு விடு­கி­றார்கள். இதனால், வாழ்நாள் முழு­வதும் அவர்கள் அந்த மனக்

­கு­றை­யு­ட­னேயே வாழ நேர்­கி­றது. செயன்­முறைக் கருத்­த­ரிப்பு மூலம் பலன் கிடைக்­குமோ, கிடைக்­காதோ என்ற சந்­தேகம் தேவையற் றது. பற்­பல ஆய்வு களுக்குப் பின் அறி­மு­க­மா­கி­யி­ருக்கும் உயர்­தொ­ழில்­நுட்பம் மூலம், இது­வரை செயற்கை முறை கருத்­த­ரிப்பில் தோல்வி கண்­ட­வர்­க­ளும்­கூட குழந்தை பெற்­றுக்­கொள்ள வாய்ப்பு இப்­போது ஏற்ப ட்டிருக்­கி­றது. “மகப்­பே­றின்மை பரி­சோ­த­னைகள் முடிந்த பின்னர் யாரிடம் குறை­பாடு என் பது அறி­யப்­ப­டு­கி­றது. அந்தக் குறை பாடுகள் களை­யப்­பட்ட பின்­னரும் குழந்­தை­யின்மை நிலை தொடர்ந்தால் அவர்­க­ளுக்கு செயற்­கை­முறை கரு­வூட்டல் சிகிச்சை மூலம் மகப்­பேறு சாத்­தி­யமா கிறது. ஆனாலும், இம்­மு­றையின் வெற்றி வீதம் குறிப்­பிட்டுச் சொல்­லும்­படி அமைவ­தில்லை. “மிகக் குறைந்த எண்­ணிக்­கையி­லுள்ள ஆணின் உயி­ர­ணுக்­க­ளைக்­கூட தற்­போது IMSI எனப்­படும் தொழில்­நுட்பத் தால் சுமார் ஆறா­யிரம் மடங்கு பெரி­தாக கணனி மூலம் அவ­தா­னித்து, அவற்றில் மிகச் சிறந்த, மிகப் பொருத்­த­மான உயி­ர­ணுவைத் தெரிந்­தெ­டுத்து அதன் மூலம் கருச்­சி­னையை உரு­வாக்கும் அதி­ந­வீன சிகிச்சை அறி­முகம் செய்யப் பட்­டுள்­ளது. இம்­முறை மூலம், ஐ.யூ.ஐ. மற்றும் ஐ.வி.எஃப். முறை­களில் தோல்வி யடைந்­த­வர்­க­ளுக்கும், தொடர்ச்­சி­யான கருச்­சி­தைவு ஏற்­ப­டு­ப­வர்­க­ளுக்கும் புதிய வழி பிறந்­தி­ருக்­கி­றது.

“முதல்­தர கருவை தேர்ந்­தெ­டுத்து வள­ரச்­செய்யும் ‘அசிஸ்டட் ரீப்பு­ரொ­டக்சன் டெக்­னா­லஜி’ என்ற பரி­சோ­த­னைக்­கூட கருத்­த­ரிப்பு தொழில்­நுட்­பத்தில் ‘எம்ப்­ரி யோஸ்கோப்’ எனும் கரு­வியின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மாக விளங்கும். ஐ.வி.எப் முறையில் பரி­சோ­த­னைக்­கூ­டத்தில் நடத்­தப்படும் கருத்­த­ரிப்பு சிகிச்­சையில் ஆரோக்

­கி­ய­மான கரு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பின் னர் குறிப்­பிட்ட சில மணி­நே­ரத்­துக்கு ஒரு முறை அதன் வளர்ச்சி கணக்­கி­டப்­படும். இப்­படி கருவின் வளர்ச்சி நிலை கணக் கிடப்­ப­டும்­போது சில நுணுக்­க­மான மாறு­தல்கள் கவ­னிக்­கப்­ப­டாமல் போகும் சாத்­தி­யங்­களும் உண்டு. இந்தக் குறையைப் போக்­கு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்­ட­துதான் எம்ப்­ரியோஸ் கோப்.  “எம்ப்­ரி­யோஸ்கோப் கருவி மூல­மாக கருத்­த­ரிப்பு சிகிச்­சைக்­காக தேர்ந் தெடுக்­கப்­பட்ட கருவின் வளர்ச்சி நிலை மிகத் துல்­லி­ய­மாகக் கணக்­கி­டப்­ப­டு­கி­றது. உலகம் முழு­வதும் இக்­க­ருவி மூலம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட கரு­வினால் பிறந்த குழந்­தைகள் மிக ஆரோக்­கி­ய­மாக இருப்­ப

­தாக ஆய்­வுகள் கூறு­கின்­றன. எம்ப்ரி யோஸ்கோப் கரு­வியில் ‘கைனடிக் அனா­லிசிஸ் ஒஃப் டைப் லேப்ஸ்’ மூலம் எடுக்­கப்­படும் கருவின் படங்கள் தர­மான கருவைத் தேர்ந்­தெ­டுக்க உத­வு­கி­றது. எனவே, தர­மான கரு­வூட்­ட­லுக்குச் சந்தேகமே வேண்டாம்.

“இவற்றைத் தவிர ‘ப்ளாஸ்­டோ­மியா’ என்ற கருவில் உள்ள செல்கள் ஒரே மாதி­ரி­யான அளவில் இருத்தல் அவ­சியம். சில நேரங்­களில் செல்கள் துண்டு துண்­டாக உரு­வாகிப் பின்பு ஒன்று சேர்ந்து ஒரே மாதி­ரி­யா­கவும் காட்­சி­ய­ளிக்­கலாம். ‘ட்ராட்­சியண்ட் ஃப்ரெக்­மென்­டேஷன்’ என்­ற­ழைக்கப் படும் இந்­நி­லையை உட­னுக்­குடன் கண்­கா­ணித்தால் மட்­டுமே கண்­டு­பி­டிக்க முடியும். கலப்­பி­ரிவு நடக்கும் கால அளவு மற்றும் நேரம் வெற்­றி­க­ர­மான மகப் பேற்­றிற்கு வழி­வ­குக்­கி­றது என்­பதும் இதில் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய ஒன்று. அது­போன்ற முக்­கிய செயற்­பா­டு­க­ளுக்கு எம்ப்­ரி­யோஸ்கோப் உத­வு­கி­றது.

“எம்ப்­ரி­யோஸ்கோப் இல்­லாத ஐ.வி.எஃப் முறையில் கருவின் வளர்ச்­சியைக் கண்­கா­ணிக்க ஒவ்­வொரு முறையும் அதை இன்­கு­பேட்­ட­ரி­லி­ருந்து வெளியே எடுக்­க­வேண்­டி­யி­ருக்கும். ஆனால், இன்­கு­பேட்­டரின் உள்­ளேயே எம்ப்­ரியோஸ் கோப் பொருத்தப் பட்­டி­ருப்­பதால் கருவை அவ்­வப்­போது கண்­கா­ணிக்க வெளியே எடுக்க வேண்­டிய அவ­சியம் இல்­லாமல் போய்­வி­டு­கி­றது. கருவை வெளியே எடுப் பதால் இன்­கு­பேட்­டரின் வெப்­ப­நி­லை

­யி­லி­ருந்து வெளி வெப்­பத்­திற்கு கரு வானது மாறும். இந்த வெப்ப மாற்­றலால் கரு­வுக்கு பாதிப்பு ஏற்­படும் நிலை வர லாம். ஆனால், எம்ப்­ரி­யோஸ்­கோப்பில் இந் நிலை தவிர்க்­கப்­ப­டு­கி­றது. மேலும், எம்ப்­ரி­யோஸ்கோப் மூலம் இன்கு பேட் டரின் உள்­ளேயே கருவின் வளர்ச்சி இடை­வி­டாமல் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வதால் ஒவ்­வொரு இரு­பது நிமி­டங்­க­ளுக்கும் ஒரு முறை இக்­க­ருவி கருவின் வளர்ச்­சியை தானா­கவே படம் பிடித்து விடு­கி­றது. நமக்குத் தேவைப்­ப­டும்­போது ஒரு சிறு பட்­டனை தட்டி முக்­கிய தரு­ணங்­களில் நிகழ்ந்த வளர்ச்­சி­க­ளையும், செயல்­பாடு களையும் துல்­லி­ய­மாகத் தெரிந்­து­கொள்ள முடியும். “மேலும், கருத்­த­ரிப்­பி­லி­ருந்து கருவா னது கருப்­பைக்கு மாற்­றப்­படும் காலம் வரை அதன் காற்­றோட்­டமும் சீராக வைக்­கப்­ப­டு­வ­தற்கு எம்ப்­ரி­யோஸ்கோப் உத­வு­கி­றது. இதன் உள்ளே HEPA என்­கிற ஃபில்டரும், ‘யுவி இல்யூமினேஷனும்’ இருப்பதனால் இன்குபேட்டரின் உள்ளே சுத்தமான காற்றையும் அது வைக்க உதவுகிறது. எனவே, இக்கருவி, முழுவதுமாய் பாதுகாக்கப்பட்ட நல்ல தரமான ஆரோக்கியமான கருவைப் பெறுவதற்கு உதவி செய்கிறது. இதனால் வெற்றிகரமான சுகமான மகப்பேறு கிடைக்கிறது. குறைப் பிரசவமும் தவிர்க்கப்படுகிறது. லயன்ஸ் கிளப் கண்டியில் 24, 25ஆம் திகதிகளில் நடத்தும் மகப்பேற்றின்மைக்கான இலவச சிகிச்சை ஆலோசனை முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 075 4000012 அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.