பிரசாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஜானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்த் நடிப்பில் 1980ஆம் ஆண்டில் வெளியான படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் பிரசாந்த்துடன் பிரபு, ஆனந்த்ராஜ், பசுபதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த புதுமுக நடிகை ஒருவர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் ஹிந்தியில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும். இதனை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கி வருகிறார் என்றும், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் தயாரிக்கிறார்.