இது தான்டா பொலிஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானவர் நடிகர் டொக்டர் ராஜசேகர். இவரது மனைவி நடிகை ஜீவிதா. இவர்களின் வாரிசான ஷிவானி தமிழ் படத்தில் கதையின் நாயகியாக அறிமுகமாகிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் பிரபு சாலமோன் இயக்கத்தில் உருவான படம் கும்கி. விக்ரம் பிரபுவின் திரையுலக வாழ்க்கையில் இது வரை கிடைத்த ஒரேயொரு கொமர்ஷல் ஹிட் படமும் இதுவே. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சில ஆண்டுகளுக்கு பிறகு இயக்குகிறார் இயக்குநர் பிரபு சாலமோன். இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் ஷிவானி. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருக்கும் நடிகை ஷிவானியை இப்போதே வாழ்த்து தெரிவிப்போம்.