தொற்றுநோய்களுக்கான தேசிய வைத்தியசாலைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு

Published By: Raam

17 Jun, 2017 | 06:44 PM
image

முல்லேரியாவில் அமைந்துள்ள தொற்றுநோய்களுக்கான தேசிய வைத்தியசாலைக்கு இன்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி அவற்றை துரிதமாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

டெங்கு நோயாளர்களினால் வைத்தியசாலை நிரம்பியுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியினால் நோயாளர்களை தங்கவைத்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், நோயாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடனும் அவர்களை தலங்கம, வேத்தர மற்றும் பிலியந்தலை வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைத்த பின்னர் வைத்தியசாலையின் செயற்பாடுகள் மீண்டும் உரியவாறு மேற்கொள்ளப்படுகின்றன.

இச்செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்த ஜனாதிபதி வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்களுக்கு தேவையான அனைத்து விசேட மருத்துவ சிகிச்சைகளையும் குறைவின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் டெங்கு நோயாளர்களின் வார்ட்டுத்தொகுதியை அவதானித்த ஜனாதிபதி அவர்கள் நோயாளர்களின் விபரங்களை விசாரித்து, அவர்களுடன் சினேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.அதன் பின்னர் வைத்தியசாலையின் பணியாட்களுடனான சந்திப்பில் ஈடுபட்டதுடன் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட வைத்தியசாலையின் ஏனைய குறைபாடுகள் தொடர்பாக வினவினார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வைத்தியசாலையின் பணிப்பாளர் திமுது ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56