இனமுறுகலை ஏற்படுத்தும் ஆவணங்கள் பொதுபலசேனாவின் அலுவலகத்தில் மீட்பு

Published By: Priyatharshan

17 Jun, 2017 | 12:28 PM
image

குரு­நாகல் பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­பவத்­துடன் தொடர்­பு­டைய  சந்­தேக நப­ருக்கு சொந்­த­மான அறை­யொன்­றி­லி­ருந்து இன முறு­கலை ஏற்ப­டுத்­து­ம் வகையிலான 486 பதா­கை­களும் பத்­தி­ரி­கை­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

குரு­நாகல் மல்­ல­வ­பி­ட்டிய முஸ்லிம் பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பொது­பல சேனா அமைப்பின் செயற்­பாட்­டா­ளர்கள் என தெரி­விக்­கப்­படும் இரு­வரில் ஒரு­வ­ருக்கு சொந்­த­மா­ன­தாக்க கூறப்­படும் கடை ‍அறை­யொன்று சோ­த­னைக்குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன் போது பத்­தி­ரி­கைகள்இ சுவ­ரொட்­டிகள்இ ஆவ­ணங்கள்இ இறு­வட்­டுக்கள் உள்­ளிட்ட 486 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் இனங்கள் மற்றும் மதங்­க­ளுக்கு இடையில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் வகையில் வாசகங்கள் எழு­தப்­பட்­டி­ருந்த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மையில் குரு­ணாகல் மல்­ல­வ­ பி­டிய பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் நடத்­தி­ய­தாக கூறப்­படும் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் இருவர் கடந்த 15 ஆம் திகதி வியா­ழக்­கி­ழ­மை­ குரு­ணாகல் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டு­த்தப்­பட்­டி­ருந்த நிலையில் 19 ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

மேற்­படி இரு சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வெல்­லவ வீதியில் அமைந்துள்ள வியா­பார நிலையத்தில் நேற்று முன்­தினம் பொலிஸார் நடத்­திய திடீர் சோத­னையின் போது இன முறு­கலை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36