வட­மா­கா­ண­ச­பையில் எழுந்­துள்ள நெருக்­க­டி­யான நிலை­மையை எவ்­வி­த­மான கரு­மங்­களை முன்­னெ­டுத்து முடி­வுக்கு கொண்டு வர­மு­டியும் என்­பதை வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனே தீர்­மா­னிக்­க­வேண்டும். அவரின் கையி­லேயே முடிவு  தங்­கி­யுள்­ளது என்று எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

வட­மா­காண இரண்டு அமைச்­சர்கள் மீது விசா­ரணைக் குழு குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­யி­ருந்த நிலையில் அவர்­களை பதவி நீக்கம் செய்­வது நியா­ய­மான செயற்­பா­டாக இருந்­தாலும் ஏனைய இரண்டு அமைச்­சர்கள் மீதும் எவ்­வி­த­மான குற்­றச்­சாட்­டுக்­களும் சுமத்­தப்­ப­டாத நிலையில் அவர்கள் மீது விசா­ரணை நடத்­து­வ­தா­கவும் அதற்­காக அவர்­க­ளுக்கு கட்­டாய விடு­முறை அளிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அறி­வித்­தி­ருப்­பது அர­சியல் சாச­னத்­திற்கு முர­ணான செயற்­பா­டாகும் எனவும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆளு­கையின் கீழ் உள்ள வட­மா­காண சபையில் தற்­போது முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்கையில்லாப் பிரே­ரணை ஆளு­ந­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டதை அடுத்து நெருக்­க­டி­யான நிலைமை ஏற்­பட்­டுள்ள சூழ்­நி­லையில் குறித்த விவ­கா­ரத்­தினை சுமு­க­மாக தீர்த்­துக்­கொள்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் என்ற வகையில் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை எடுத்­தீர்கள்? அதன் பிர­காரம் சாத்­தி­ய­மான நிலை­மைகள் ஏற்­பட்­டி­ருக்­கின்­ற­னவா? என்­பது தொடர்பில் கேள்வி எழுப்­பி­ய­போதே எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­வித்­த­தா­வது;

வட­மா­காண சபையில் உள்ள அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டதன் கார­ணத்தால் அவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக முத­ல­மைச்­சரால்  மூவர் கொண்ட விசா­ர­ணைக்குழு­வொன்று அமைக்­கப்­பட்­டது.

அந்­தக்­கு­ழு­வாது ஒரு அமைச்சர் ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவும் மற்­றொரு அமைச்சர் நிர்­வாக சீர்­கே­டு­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்டி விசா­ரணை அறிக்­கையை முத­ல­மைச்­ச­ரி­டத்தில் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

அத­னை­ய­டுத்து வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் நான்கு அமைச்­சர்­க­ளையும் நீக்­கு­வ­தற்கு முயற்­சிகள் எடுத்து வரு­கின்றார் என்ற தக­வல்கள் எனக்கு கிடைக்­கப்­பெற்­ற­தை­ய­டுத்து கடந்த செவ்­வாய்­க்கி­ழமை நான் முத­ல­மைச்­ச­ருடன் தொலை­பே­சியில் உரை­யா­டி­யி­ருந்தேன்.

அதன்­போது நான் அவ­ரி­டத்தில் இந்த விட­யங்கள் குறித்து கேள்வி எழுப்­பினேன். அதா­வதுஇ நீங்கள் நிய­மித்த விசா­ர­ணைக்­குழு இரு அமைச்­சர்கள் மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­யுள்­ளது. அவ்­வா­றான நிலையில் நீங்கள் ஏனைய இரு அமைச்­சர்கள் உள்­ள­டங்­க­லாக நால்­வ­ரையும் நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­தாக அறி­யக்­கி­டைத்­துள்­ளது. அது உண்­மை­தானா? அவ்­வி­த­மான கரு­மங்­களை முன்­னெ­டுக்­கின்­றீர்­களா? என வின­வி­யி­ருந்தேன்.

அதன்­போது முத­ல­மைச்சர் இரண்டு அமைச்­சர்­களை பத­வி­வி­லக கோர­வி­ருப்­ப­தா­கவும் ஏனைய இருவர் மீதும் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அதற்­காக அவர்­க­ளுக்கு விடு­முறை வழங்­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

அச்­ச­ம­யத்தில் நான் அவ­ரி­டத்தில் சில­க­ருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தேன். தாங்கள் நிய­மித்த விசா­ர­ணைக்­கு­ழு­வா­னது இரண்டு அமைச்­சர்கள் மீதே குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. அவ்­வா­றான நிலையில் தாங்கள் ஏனைய இரண்டு அமைச்­சர்கள் மீதும் நட­வ­டிக்­கை­களை எடுப்­பது பொருத்­த­மான செயற்­பா­டாக எனக்குத் தெரி­ய­வில்லை.  இவ்­வா­றான செயற்­பாடு எடுக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் உறுப்­பி­னர்கள் மத்­தியில் பிரச்­சி­னைகள் எழு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­கின்­றன. ஆகவே அந்த செயற்­பாட்டை தாங்கள் மறு­ப­ரி­ சீ­லனை செய்ய வேண்டும். 

மேலும் தாங்கள் இந்த விடயம் சம்­பந்­த­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்­றீர்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யானஇ வட­மா­காண சபையில் அதி­க­ளவு உறுப்­பி­னர்­களைக் கொண்ட கட்­சி­யான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ரா­ஜா­வுடன் கலந்­து­ரை­யா­ட­வில்லை. அவ்­வி­த­மான நிலையில் தாங்கள் அவ­ருடன் கலந்­து­ரை­யா­டு­வது அவ­சியம் என்றேன். 

அதன்­போது முத­ல­மைச்சர் நான் அவ­ருடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான நேர­காலம் இருந்­தி­ருக்­க­வில்லை. இன்­றை­ய­தினம் (செவ்­வாய்க்­கி­ழமை) நிச்­ச­ய­மாக அவ­ருடன் தொடர்பு கொண்டு பேசுவேன் என்று குறிப்­பிட்டார். 

அத­னை­ய­டுத்து முத­ல­மைச்சர் மாவை.சேனா­தி­ரா­ஜா­வுடன் தொடர்பு கொண்டு பேசினார். அச்­ச­ம­யத்­திலும் நான் வலி­யுத்­தி­ய­தைப்­போன்றே மாவை.சோனா­தி­ரா­ஜாவும்இ இரண்டு அமைச்­சர்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­ப­டு­வதால் அவர்கள் மீது நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளுங்கள். அதில் தவ­றில்லை. ஆனால் குற்றம் சாட்­டப்­ப­டாத அமைச்­சர்கள் மீது நட­வ­டிக்கை எடுப்­பது தவறு. அவ்­வாறு நீங்கள் நால்­வ­ரையும் நீக்­கு­வ­தென்றால்   ஐவரும் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டிய நிலை­மையே ஏற்­படும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

அதன் பின்னர் முத­ல­மைச்சர் 14ஆம் திகதி நடை­பெற்ற சபை அமர்­வின்­போது இரண்டு அமைச்­சர்­களை நீக்­கு­வ­தா­கவும் ஏனைய இரண்டு அமைச்­சர்கள் மீதும் விசா­ரணை மேற்­கொள்­வ­தா­கவும் அதற்­காக கட்­டாய விடு­முறை அளிப்­ப­தா­கவும் அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்தே நெருக்­க­டி­யான நிலை­மைகள் எழுந்­தன. இந்­நி­லையில் நான் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை மாவை.சேனா­தி­ரா­ஜா­வு­டனும் செல்வம் அடைக்­க­ல நா­த­னு­டனும் சிவ­சக்தி ஆனந்­த­னு­டனும் சித்­தார்த்­த­னு­டனும் சி.வி.கே.சிவ­ஞா­னத்­து­டனும் சத்­தி­ய­லிங்கத்துடனும் தொலை­பே­சி­யூ­டாக பேசினேன். அவர்­களின் கருத்­துக்­க­ளையும் பெற்­றுக்­கொண்டேன்.

இந்­நி­லையில் இந்த விவ­கா­ரத்­தினை சுமு­க­மாக தீர்த்­து­கொள்ள வேண்டும் என்று எதிர்­பார்த்தேன். சித்­தார்த்தன் முத­ல­மைச்­சரின் யாழி­லுள்ள வீட்­டுக்குச் சென்று அங்­கி­ருந்து என்­னுடன் தொலை­பேசி ஊடாக தொடர்பு கொண்டார். முத­ல­மைச்­ச­ருடன் உரை­யா­டு­மாறு கேட்­டுக்­கொண்டார்.

அதற்­க­மை­வாக நான் முத­ல­மைச்­ச­ரி­டத்தில் பேசினேன். அதன்­போது நான் அவ­ரி­டத்தில் இந்த நெருக்­க­டி­யான நிலை­மையை சுமு­க­மாக தீர்த்­துக்­கொள்ள வேண்டும். அதற்­கான கரு­மங்­களை முன்­னெ­டுக்க வேண்டும் எனக் குறிப்­பிட்டேன். அதன் பிர­காரம் தாங்கள் (முத­ல­மைச்சர்) விசா­ரணை அறிக்­கையின் பிர­காரம் ஊழல் மோசடிஇ நிர்­வாக சீர்­கேடு ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டையில் இரண்டு அமைச்­சர்கள் மீது நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்­றீர்கள். 

ஆனால் ஏனைய இரண்டு அமைச்­சர்­க­ளுக்கு கட்­டாய விடு­முறை அளித்­துள்­ளீர்கள். அந்த முடிவு தவ­றா­னது. அமைச்­சர்­களை நிய­மிக்­கவோ அல்­லது நீக்­கவோ தான் முத­ல­மைச்­ச­ருக்கு அர­சியல் சாச­னத்தில் இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. கட்­டாய விடு­முறை அளிப்­ப­தற்கு இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆகவே தாங்கள் அந்த   அறி­விப்பை மீள் பரி­சீ­லனை செய்து அக்­கூற்றை மீளப்­பெ­று­வீர்­க­ளாயின் இந்த விட­யத்­தினை சுமுக­மாக தீர்த்­துக்­கொள்­வ­தற்கு வாய்ப்­புக்கள் இருக்­கின்­றன எனக் குறிப்­பிட்டேன்.

அச்­ச­ம­யத்தில் முத­ல­மைச்சர், எனக்கு எதி­ரா­கவும் சில நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. நான் அந்த விட­யத்தை பரி­சீ­லனை  செய்­யத்­த­யா­ராக இருக்­கின்றேன். குறித்த இரண்டு அமைச்­சர்­க­ளி­டத்­தி­லி­ருந்தும் எழுத்து மூல­மான உத்­த­ர­வா­த­மொன்றை எனக்குப் பெற்­றுக்­கொ­டுங்கள் என்று கேட்­டுக்­கொண்டார். அச்­ச­ம­யத்தில் எழுத்து மூல உத்­த­ர­வாதம் போன்ற விட­யங்­களை தவிர்த்து தங்­களின் முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்­யுங்கள் அதன் ஊடாக இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைப் பெற­மு­டியும் என குறிப்­பிட்டேன். அத­னை­ய­டுத்து அந்த தொலை­பேசி உரை­யாடல் நிறை­வுக்கு வந்­தது.

அதன் பின்னர் இந்த விடயம் தொடர்­பாக நான் மீண்டும் மாவை.சேனாதி­ரா­ஜா­வு­டனும், குறிப்­பிட்ட அமைச்­சர்­க­ளான சத்­தி­ய­லிங்கம், டெனிஸ்­வரன் ஆகி­யோ­ரி­டத்தில் பேச்­சுக்­களை நடத்­தினேன். விசா­ரணைக் குழுவின் மூலம் குற்றம் சாட்­டப்­ப­டாத நிலையில் அவர்கள் எழுத்­து­மூ­ல­மான உத்­த­ர­வா­தத்­தினை வழங்­கு­வது பொருத்­த­மில்லை. அதற்கு அவ­சி­யமும் இல்லை. 

நாங்கள் ஊழ­லுக்கு எதி­ரா­ன­வர்கள் தான். அதில் எந்­த­வி­த­மான மாற்­றுக்­க­ருத்­துக்கும் இட­மில்லை. மத்­தியில் ஊழல் நிறைந்த  ஆட்­சியை மாற்­று­மாறு குரல்­கொ­டுத்து வந்­தி­ருந்தோம். தற்­போதும் எமது நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை. இலஞ்சம்இ ஊழல் மோச­டிகள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். அதில் ஈடு­பட்­ட­வர்கள் நீதித்­து­றையின் பிரகாரம் முறையாக தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். 

ஆனால் குற்றம் சாட்டப்படாதவர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பது பொருத்த மற்றதொன்றாகும். அரசியல் சாசன ஒழுங்கு விதிகளை மீறிச் செயற்படுவது பொருத்தமற்றது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படாதவர்களிடத்தில் உத்தரவாதத்தை எழுத்துமூலம் கேட்பதும் நியாயமற்ற கோரிக்கை. அரசாங்க ஊழியர்களை தான் குற்றச்சாட்டுக்களுக்காக விடுமுறையில் அனுப்ப முடியும். அதற்கான ஏற்பாடே இருக்கின்றது. 

ஆகவே அவ்விதமான கோரிக்கைகளை முதலமைச்சர் மீளப்பெற்றுக்கொள்வராயின் இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறான முடிவொன் றுக்கு முதலமைச்சர் வராத பட்சத்தில் நிலைமைகள் வேறுவடிவத்திற்கு செல்ல முடியும். 

எவ்வாறாயினும் நான் தொடர்ந்தும் அனைத்து  உறுப்பினர்களுடனும் பேசிக்கொண்டிருக்கின்றேன். இந்தப் பிரச்சினை யையை  சுமுகமாக தீர்ப்பதற்குநான்  அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுகின்றேன். எனினும் முதலமைச்சர் கையில் தான் முடிவு இருக்கின்றது. அவர் தான் இந்த விவகாரத்தினை ஆரம்பித்தவர். தற்போதும் அவரின் அறிவிப்பில் தான் முடிவு இருக் கின்றது என்றார்.