வட மாகாண சபையின் இன்­றைய இக்­கட்­டான சூழ்­நிலை மிக சுமு­க­மா­கவும் அதே­வேளை மிக சீக்­கி­ரத்­திலும் தீர்க்­கப்­பட­ வேண்டும். அவ்­வாறு இல்­லை­யெனில் தமிழ் சமூ­கத்தை கூறு­போட்டு சீர­ழிக்கக் காத்­தி­ருக்கும் பேரி­ன­வா­தி­க­ளுக்கு இது இன்­னொரு சந்­தர்ப்பமாக ஆகி­விடும். 

Image result for முதல்வர் சீ.வி. virakesari

ஏற்­க­னவே மூன்று தசாப்த கால யுத்­தத்தால் சொல்­லொணா துய­ரங்­க­ளுக்கு முகங் கொடுத்­து­வரும் தமிழ் சமூ­கத்­துக்கு இன்­ற­ள­விலும் எந்­த­வி­த­மான நியா­ய­மான தீர்­வு­களும் கிடைக்­காத பட்­சத்தில், அதை நோக்கி பய­ணிக்க வேண்­டிய தரு­ணத்தில் தமது சுய­நல அர­சியல் சித்­தாத்­தங்­க­ளுக்­காக சீ.வி.விக்­னேஸ்­வரன் போன்ற ஆளு­மை­மிக்க ஒரு அரிய பொக்­கி­ஷத்தை பழி வாங்க நினைப்­பதோ அன்றி அர­சி­யலில் இருந்து ஓரங்­கட்ட நினைப்­பதோ மீண்­டு­மொரு முறை தமிழ் சமூ­கத்தை அர­சியல் அநா­தைகள் ஆக்­கு­வ­தற்கு கார­ண­மாக ஆகி­விடும். வட மாகாண முதல்வருக்கு எமது தார்மீக ஆதரவு எப்போதுமே உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். என்று மேல்மாகாண சபை உறுப்பினர் கே.ரி. குருசாமி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடமாகாண சபையின் தற்போதைய வி­ட­ யத்தை மேலும் வள­ர­வி­டாமல் அர­சியல் அனு­ப­வமும் தலை­மைத்­துவ ஆளு­மையும் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி உடன் தீர்வை எட்­ட முயற்­சிக்க வேண்டும். தவறும் பட்­சத்தில் தமிழ் மக்­களின் பழிச் சொல்­லுக்கும் ஆளாக நேரிடும்.

வட, கிழக்கில் வாழ்­கின்ற தமிழ் மக்கள் எதிர்ப்­பார்க்­கின்ற ஒரு அர­சியல் நகர்வை நோக்கி பய­ணிக்­கின்ற சீ.வி.விக்­னேஸ்­வரன் போன்ற தூர­நோக்கு, தீர்க்­கத்­த­ரி­சனம் மிக்க அர­சியல் தலை­மைத்­து­வங்கள் மிகவும் குறை­வான இன்­றைய காலக்­கட்­டத்தில் அதை­விட அவரின் அர­சியல் அணு­கு­மு­றை­களை ஏற்­க­னவே சகித்­துக்­கொள்ள முடி­யாத ஏனைய சமூ­கங்கள் அவரை வீழ்த்­திவிட எத்­த­னித்­துக்­கொண்­டி­ருக்கும் இன்­றைய கால­கட்­டத்தில் அந்த கைங்க­ரி­யத்தை நாமே செய்­வது எமது கையால் எமது கண்­களை நாமே பிடுங்கிக்கொள்­வ­தாக ஆகி­விடும்.

ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் மனோ­க­ணேஷனுடைய அர­சியல் அணு­கு­மு­றை­களால் ஈர்க்­கப்­பட்ட வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வரன் கடந்த மேல் மாகாண சபை தேர்­த­லிலே தனிப்­பட்ட மனி­த­ராக எமது தேர்தல் மேடை­யிலே தோன்றி அமைச்சர் மனோ­க­ணேஷன் தலை­மை­யிலே போட்­டி­யிட்ட முன்­ன­ணியின் வேட்­பா­ளர்­க­ளுக்கு தமது ஆத­ரவு கரத்தை நீட்­டி­யி­ருந்தார். 

அத்­துடன் மனோ­க­ணேஷனுக்கும், முதல்வர் விக்­னேஸ்­வரனுக்கும் நீண்ட கால­மா­கவே தமது சமூகம் சார்ந்த சிநே­க­பூர்வ உறவும் உண்டு. 

“ஒற்­று­மை­யில்­லாக்­குடி ஒரு­மிக்கக் கெடும்” என்ற சான்றோர் வாக்­குக்­கிணங்க கெட்­டுப்­போன குடி மீண்டும் கெட யாரும் அனு­ம­திக்கக் கூடாது என்பதை பவ்யமாக கேட்டு கொள்கிறோம்.