பாடசாலை மாணவர்களின் சீருடையை மாற்றியமைத்தல் எந்தவிதமான தீர்மானங்களுக்கும் வரவில்லை : ஜனாதிபதி

Published By: Robert

17 Jun, 2017 | 09:54 AM
image

பாடசாலை மாணவர்களின் சீருடையை மாற்றியமைத்தல் தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி, அஸ்கிரிய ஸ்ரீ சந்ரானந்த பௌத்த வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரிவெனாக்கள் மற்றும் விகாரைகளை மையமாகக் கொண்ட கல்வி முறையானது தியாகம், கருணை மற்றும் மனிதாபிமானத்தினால் அன்று இலங்கை நாட்டை போஷித்ததுடன், சமய வழிபாட்டுக்களுடன் ஒன்றிய சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அனைத்து சமயத் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். 

புதிய தொழில்நுட்பங்களுடன் சமூகம் தழுவிக்கொண்டுள்ள இணையம் மற்றும் பேஸ்புக் என்பன இன்று பிள்ளைகளின் விழுமியப் பண்புகள் மற்றும் நற்குணங்களை அழித்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி கல்வியுடன் பிள்ளைகளின் அறிவையும், ஒழுக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் தெரிவித்தார். 

இணையம் மற்றும் சில ஊடகங்களினூடாக இன்று இனவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையே வேற்றுமையை விதைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு தனி நபரோ அல்லது அமைப்போ மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்வார்களாயின் அவர்கள் எந்த சமயத்தவராகவோ அல்லது இனத்தவராக இருப்பினும் அது அவர்களது நாகரிகம் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினையாகும் என்றும் குறிப்பிட்டார்.

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 166 கிறிஸ்துவ தேவாலயங்கள் கடந்த சில மாதங்களுக்குள் தாக்கப்பட்டதாக நபர் ஒருவர் தெரிவித்தமை தொடர்பாக தான் பல விடயங்களையும் நன்கறிந்த அதிவண. பேராயர் மெல்கம் ரஞ்சித்விடம் வினவியதுடன், அத்தகையதொரு நிகழ்வு பதிவாகவில்லையென அவர் தெரிவித்ததுடன், மக்களை திசை திருப்புவதற்காக இவ்வாறான பொய் பிரசாரங்கள் வெளியிடப்படுவதை தான் மிகவும் கண்டிப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

தமது திறமைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்திய பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி சான்றிதழ்களையும், பரிசில்களையும் வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40