கொலம்பியாவில் காலி நகரில் உள்ள வைத்தியசாலையில் 6 ஆவது மாடியில் இருந்து தாதி தவறி விழுந்ததில் வைத்தியர் பலியாகியுள்ளார்.

டெல்வாலி பல்கலைக்கழக வைத்தியசாலையில் பயின்றுவந்த தாதி மரியா இசபெல் கான் சலேஷ், குறித்த வைத்தியசாலையில் 6 ஆவது மாடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அங்கிருந்து கீழே தவறி விழுந்தார்.

அப்போது வைத்தியசாலை வளாகத்தில் வெளியே உணவகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த வைத்தியர் இசபெல் முபியோஷ் மீது விழுந்தார். அதில் இருவரும் படுகாயமடைந்தனர். உடனே இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வைத்தியர் இசபெல் முபியோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தாதி மரியா இசபெல் உயிர்பிழைத்து தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.