பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கத்தியுடன் உலாவிய நபரொருவரை பிரித்தானியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அண்மைக்காலங்களில் லண்டனில் இடம்பெற்ற இருவேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டதையடுத்து பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.