நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் பாதசாரி கடவையில், பாதை கடக்க முற்பட்ட 6 வயது சிறுமியின் இறுதி கிரியைகள் இன்று ரதல்ல கீழ்பிரிவு தோட்டத்தில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு நானுஓயா நகரமும், பிரதேசமும் பதற்றநிலையிலிருந்து ஒரு சுமூகமான நிலைக்கு திரும்பியுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் அஞ்சலிக்காக பிரதேச மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேவேளை அப்பகுதியில் அனுதாப பதாதைகள் மற்றும் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவரெலியா பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

நானுஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மை நிலமை தொடர்பான விசாரணைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.