வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முதலமைச்சருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் ஒன்று திரண்ட பொது மக்கள் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள்  ஊழலுக்கு தண்டனை வழங்கு நீதியை, மக்களுக்காக ஆளுநரை சந்திக்க மறுத்தவா்கள் பதவிக்காக ஆளுநரின் காலில், ஊழலுக்குத் துணை நின்றால்தான் பதவியில் நீடிக்கலாமா? , தமிழரசுக் கட்சியே முதல்வரும் ஊழலுக்கு உடந்தையாக வேண்டுமா?, முன்னுதாரணமான முதலமைச்சரின் செயலுக்கு தடையா?,  நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடன் இரத்துச் செய், எங்கள் முதல்வர் எங்களுக்கு வேண்டும், பதவிக்காக ஆளுநரிடம் சரணடைந்ததா தமிழரசுக் கட்சி,  நீதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்,  நீதியின் குரலை நீக்குவதற்கு நீங்கள் யார்?,  குற்றவாளிகள் நீதிமானை தண்டிப்பதா?, பதிவி ஆசையே நம்பிக்கையில்லா பிரேரணை, ஊழலை மறைக்க எதிரியுடன் கூட்டா?, தமிழரசுக் கட்சியே நீ இலங்கை அரசின் கைக் கூலியா?   போன்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.