மண்­ச­ரிவு அபா­யத்தை எதிர்நோக்­கி­யுள்ள இடங்­கொ­டை மக்கள்

Published By: Robert

16 Jun, 2017 | 11:17 AM
image

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் அமைந்­துள்ள இடங்­கொடை, சிங்­கள கொட மேற்­பி­ரிவு தனியார் தோட்­டத்தில் தொழில் புரியும் சுமார் 85 குடும்­பங்கள் மண்­ச­ரிவு தற்போது இவர்கள் அபா­யத்தை எதிர்­நோக்­கி­யுள்­ள­னர். அருகில் உள்ள தமிழ் பாட­சா­லை­யான சிங்­க­ள­கொட இ/தமிழ் வித்­தி­யா­லயத்தில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். பகல் நேரங்­களில் தமது வீடு­க­ளிலும் இரவு வேளையில் அப்­பா­ட­சா­லையிலும் தங்­கு­வ­தாக அங்­குள்ள மக்கள் தெரி­விக்­கின்­றனர். அத்­துடன் கடந்த 12 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்தில் இருந்து வந்து மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் போது உட­ன­டி­யாக அப்­ப­கு­தியில் உள்ள 21 குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்­களை வெளி­யே­றும்­படி கேட்டுக் கொண்­டனர். 

Image result for மண்­ச­ரிவு

அத்­துடன் நக­ரத்­திற்கு செல்லும் குறுக்குப் பாதையில் அமைந்­துள்ள பால­மொன்று வெடித்­தி­ருப்­ப­தா­கவும் அதில் பய­ணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்­ளப்­பட்­டனர்.

மேலும் இவர்கள் வேறு பாதையில் அவ­சர தேவை­க­ளுக்­காக நக­ருக்கு செல்­வது என்றால் 6 கிலோ மீற்றர் தூரம் அப்­பா­தையில் அனு­ப­வ­முள்ள முச்­சக்­கர வண்டி சார­திக்கு ரூபா 1500 செலுத்­தியே செல்ல வேண்டி இருப்­ப­தா­கவும் அங்­குள்­ள­வர்கள் தெரி­வித்­தனர். சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் குறுக்­கு­வழி செல்லும் பாலத்­தை­யா­வது உட­ன­டி­யாகச் சீர் செய்து தரு­மாறு கேட்டுக் கொள்­கின்­றனர். 

அத்­துடன் கடந்த 12 ஆம் திகதி பலாங்­கொடை பெட்­டி­கல கீழ்­ப்பி­ரிவு ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் தேவஸ்­தான குழு­வி­னரும் பலாங்­கொடை பிர­தேச சபை முன்னாள் உப தலைவர் ஏ.எஸ். விஜ­ய­கு­மாரனும் அத்­தோட்டப் பகு­திக்கு சென்று உணவு, உடை உள்­ளிட்ட பொருட்­களை கொடுத்­த­துடன் மேற்­படி மண்­ச­ரிவு சம்­பந்­த­மாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுடன் தொடர்பு கொண்டு உத­வி­களை பெற்றுத் தருவதாக விஜயகுமாரன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01