ஒருவகையான மர்மக் காய்ச்சலால் களனி பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்திற்கு மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் மத்தியில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவிவருவதாகவும் இதனால் பல்கலைக்கழகம் இன்று நண்பகல் 12 மணிமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் அறிவித்துள்ளது.