வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வடகிழக்கில் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் இடம்பெற்றுவருகின்றது.

ஹர்த்தாலை முன்னிட்டு வடமாகாணமெங்கும் கடைகள் பூட்டப்பட்டு பாடசாலைகள், வங்கிகள் அரச தனியார் நிறுவனங்கள் அனைத்தின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதனால் வடக்கின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த பொது கடையடைப்புக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.