மின் பிறப்பாக்கத் திட்டம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களிடம் ஆலோசனை

Published By: Priyatharshan

15 Jun, 2017 | 05:34 PM
image

இலங்கை மின்சார சபையால் தயாரிக்கப்பட்டதும் எதிர்வரும் 20 ஆண்டு காலத்திற்கான (2018-2037) இலங்கையின் மின்சக்திப் பிறப்பாக்கத்திற்கு உரியதுமான திட்டம், அனுமதி கோரி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறைக்கான ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இத் திட்டம் தொடர்பில் பொதுமக்களிடம் ஆலோசனை பெறும் நிகழ்வினை இன்று காலை நடத்தியது. 

பொதுமக்களிடம் ஆலோசனை பெறும் இந்த நிகழ்வு சர்வதேசக் கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்றது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான தம்மித்த குமாரசிங்க அறிமுக உரையாற்றி, அனைவரையும் வரவேற்றார். 

அவ் அறிமுக உரையின் பின்னர் ஆணைக்குழுவின் செயலாளரால் ஆலோசனையளிப்பு நிகழ்வில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரான சாலிய மத்யூ உத்தியோக பூர்வமாக இந்நிகழ்வினை, ஆரம்பித்து வைத்தார்.

பெற்றோலிய மூலவளங்கள் அபிவிருத்திச் செயலகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி ப்ரீத்தி விதானகே, மழைக்காடு காப்பாளர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த ஜயந்த விஜெசிங்க, இலங்கை உயிர்ச் சக்தி சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பராக்கிரம ஜயசிங்கே ஆகியோர் இந்த மின் பிறப்பாக்கத்திட்டம் தொடர்பிலான தம் கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஆக்க பூர்வமான அணுகுமுறையில் முன்வைத்தனர்.

மேலும், மூலோபாய வணிக முகாமைத்துவ முகவரகம், சுற்றுச்சூழல் மன்றம், இலங்கை சூரிய சக்தித் தொழிற்றுறைகள் சங்கம், சிறு நீர்ச்சக்தி அபிவிருத்தியாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளும் தத்தம் பிரதிநிதிகளை அனுப்பி, அடுத்த இருபது ஆண்டுகளுக்கான மின் பிறப்பாக்கத் திட்டம் மீதான தம் கருத்துகளை வெளிப்படுத்தின. 

இவ் அமைப்புகள் மட்டுமல்லாது, மின்சாரத் தொழிற்றுறை விற்பன்னர்கள், சூழலியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோரும் தம் கருத்துகளை ஆணைக்குழுவின் முன் வெளிப்படுத்தினர்.

இலங்கை மின்சார சபையால் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இலங்கைக்கான மின்சக்தித் தேவைப்பாட்டினைப் பூர்த்தி செய்யும் விதமாக தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகளும் ஆலோசனைகளும் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31