சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் பங்களாதேஷ் - இந்திய அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நாணச்சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணித் தலைவர் விராட் கோலி, பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடப்பணித்துள்ளார்.

பேர்மிங்ஹாமில் இடம்பெறும் இப்போட்டி, காலநிலை சீரின்மையால் சற்று தாமதமாக ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து அணிக்கெதிரான அரையிறுதியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் விளையாடத்தகுதிபெற்றுள்ள நிலையில், அவ் அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாட எந்தணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் என்பதை பெறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றால் இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்த சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.